Wednesday, November 21, 2018

யேசுதாஸ் செய்வதைத்தானே கிருஷ்ணாவும் . . .


கர்னாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா புதுடெல்லியில் நிகழ்த்த இருந்த ஒரு இசை நிகழ்ச்சியை காவிகளின் மிரட்டல் காரணமாக ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்து விட்டனர்.

இரண்டே நாளில் ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சியை ஆம் ஆத்மி கட்சி நடத்தி விட்டது என்பது திருப்தி அளிக்கிற செய்தி. 

காவிகளுக்கு ஏன் கிருஷ்ணா மீது வெறி?

அடித்தட்டு மக்களுக்கு, அவர்களுக்கு புரியும் வகையில் கர்னாடக இசையை டி.எம்.கிருஷ்ணா எடுத்துச் செல்வது முதல் கோபம். அவர்கள் பாதுகாத்து வந்த இசைக் கோட்டை தகர்ந்து போவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

ஏசுவை பாடு பொருளாகக் கொண்டு ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுவதை காவிகள் தடுக்கையில் தான் ஒவ்வொரு மாதமும் ஏசுவையும் அல்லாவையும் புகழ்ந்து ஒரு பாடல் பாடுவேன் என்று அவர் சொன்னவுடன் இவர்களின் கோபம் அதிகரித்து விட்டது.

மாற்று மதத்தவர்கள் பற்றி கிருஷ்ணா பாடக் கூடாது என்று கட்டளை போடும் இவர்கள்

ஐயப்பன் பற்றியும் கிருஷ்ணன் பற்றியும் நெஞ்சுருக கே.ஜே.யேசுதாஸ் பாடுவதை மட்டும் ஏன் வரவேற்கிறார்கள்?

சபரிமலையின் ஒவ்வொரு நாள் இரவும் யேசுதாஸின் "ஹரிவராசனம்" பாடலுடன் நிறைவு பெறுவதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்கள்?

இசை மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை கே.ஜே.யேசுதாஸ் இந்து மதக்கடவுள்களை பாடுகையில் நியாயப் படுத்துகையில் அந்த நியாயத்தை  கிருஷ்ணாவிற்கு மட்டும் ஏன் மறுக்கிறார்கள்?

காரணம் மிகவும் எளிமையானது.

காவிகளுக்கு

கடவுளோ
அல்லது 
இசையோ
அல்லது 
ஏன் மதமே 
கூட முக்கியமில்லை.

கலவரம் நிகழ்த்துவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும்.
அவ்வளவுதான்

பிகு

நான் எப்போதுமே கே.ஜே.யேசுதாஸின் தீவிர ரசிகன். டேப் ரிகார்டரை பயன்படுத்திய காலத்தில் அவரது காஸெட்டுக்கள் நூறுக்கும் மேல் என்னிடம் உண்டு.

பிகு 2

"ஒரு கிறிஸ்துவன் பாடறதுக்குப் போய் இவ்வளவு கூட்டம்!" என்று ஒரு சாரார் பந்தலை விட்டு வெளியேறுகையில் திட்டிக் கொண்டே போனதையும் திருவையாறு தியாகராஜர் விழாவில் இரண்டு வருடங்கள் நேரில் பார்த்து நொந்துள்ளேன்.


8 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. நீ ஆயிரம் கமெண்ட் போட்டாலும் அத்தனையும் டெலீட்தான். இதனால் எனக்குத்தான் பலன். யோசி. உண்மை புரிந்தால் என் பக்கமே நீ வர மாட்டாய். எனக்கு நல்லது நடந்தால் உனக்குத்தான் பிடிக்கவே பிடிக்காதே. நீண்ட நாளாக காணாமல் போயிருந்த நீ மறுபடியும் ஏன் வக்கிரமாக வாந்தி எடுக்க ஆரம்பித்தாய் என்பதும் அந்த அளவிற்கு உனக்கு எரிச்சலூட்டிய உண்மையை உனக்கு யார் சொன்னது என்பதும் எனக்கு தெரியும்.

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. This comment has been removed by a blog administrator.

   Delete
  4. This comment has been removed by a blog administrator.

   Delete
  5. டேய், டேய், நடிக்காதடா. நீ யாரு, உன் கூட்டாளி யாரு. ரெண்டு பொறுக்கிங்களுக்கும் என்ன நோக்கம், அது முடியாத போது வர எரிச்சல் எல்லாமே எனக்கு தெரியும். தூ. மானங்கெட்ட ஜென்மங்களே

   Delete
  6. This comment has been removed by a blog administrator.

   Delete
 2. Muralidara samigal (?) Is also singing iraivanidam Kai enthungal song,the masterpiece of Nagoor Haneefa.Jikki's chiristian songs are very popular even now.sheik chinna moulana's nadaswaram ringing in everyone's ears,and his son and daughter-in-law now.it is all that music that influences everyone.Sangis will never want to know the truth.

  ReplyDelete