Wednesday, May 23, 2018

சபாஷ் சூர்யா! சொதப்பல் கமலஹாசன்

"போராட்டம் என்பது இது போல  ரத்தத்தில்தான் முடியும் வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் போராட்டத்தில் ஈடுபடவில்லை. புத்தியை உபயோகப்படுத்த வேண்டும்"

என்று வழக்கம் போல விளக்கெண்ணெய் விளக்கம் கொடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன்,

உங்க புத்தியை உபயோகப்படுத்தியிருந்தா இப்படி அபத்தமா பேசியிருக்க மாட்டீங்க.

கட்சி பேரை மய்யம் னு வைச்சதனால எப்பவுமே  இப்படி நடு சென்டராதான் இருப்பீங்களா?

உயர்மட்ட குழு உறுப்பினரா இருக்கிற பாரதி கிருஷ்ணகுமார் கிட்ட கொஞ்சம் வரலாற்றுப் பாடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களோடு சேர்ந்து அவரும் குழம்பிப் போயிருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.

சரி உங்க சக நடிகர் சூர்யா எழுதின கட்டுரையை கொஞ்சம் படிங்க.

அரசாங்கத்தின் எதிர்வினைகளுக்கு அஞ்சாமல் உரக்கப் பேசியுள்ள சூர்யாவுக்கு பாராட்டுக்கள்.

சூர்யாவின் கட்டுரை கீழே உள்ளது.

*போராட்டங்கள் ஏன் கலவரங்களாகின்றன?*

சூர்யா

தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டம் கொடூரமான உயிர் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவதுதான் மக்கள் முன்னிருக்கும் ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர் கள் மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.

*மகாராஷ்டிரம் நிராகரித்த ஆலை*

தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக் கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்துக்கான நீண்ட காலப் போராட்டம். மக்கள்ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள். “ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்என்று மகாராஷ் டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.

சின்ன குழந்தைகள்கூடஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூடப் போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது. மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களைச் செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?

படப்பிடிப்புக்காகப் பல முறை நான் தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக் கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!

*குப்பைத்தொட்டியா தமிழகம்?*

2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

தூத்துக்குடியின்ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிராக மட்டும் அல்ல; விவசாய நிலங்களையும் வாழ்வாதார இடங்களையும் அழிக்கிறஹைட்ரோ கார்பன் திட்டம்’, ‘மீத்தேன் திட்டம்’, ‘நியூட்ரினோ திட்டம்என்று தமிழக மக்கள் இன்று எதிர்க்கும் பல திட்டங்களும் அடிப்படை யில் இந்த மண்ணைக் காப்பதற்கான போராட்டங்கள். தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ‘ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக் கூடைக்குள் தூக்கி எறிவதைப் போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் போராட்டங்களைபல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லைஎன்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்? மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?

அரசு என்ன சொல்கிறது, ‘வேலைவாய்ப்பு தருகிறோம்என்கிறது. ‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம். உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்என்று மக்கள் சொல்லும்போது, ‘உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது. அப்படியென்றால், *யாருடைய வாழ்வாதாரத்தை அடகுவைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?*

ஒரு பிரச்சினையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணை கொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச் சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத் தைக் குலைக்கின்றன.

வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம். இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது!

- *சூர்யா, நடிகர்*, *சமூகச்* *செயல்பாட்டாளர்.*

தொடர்புக்கு: suriya@agaram.in


15 comments:

 1. அங்கிள்: உங்க கமலு எழவு விழுந்த இடத்திலிருந்து (தூத்துக்குடி) குளிக்காமல் பங்களூரு போயி குமாரசாமி, சோனியா, ராகுல் எல்லாரையும் கட்டி பிடிச்சு ஒப்பாரி வச்சு தமிழர்களுக்காக அழறாராமில்ல?!

  இப்போ ரொம்ப ரொம்ப அவசியம் பாருங்க, குமாரசாமிக்கு கும்பிடுபோட!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். நம்ம ரஜனி தாத்தா எங்க இருக்காரு வருண் ?

   Delete
  2. ரஜினி தாத்தா கேரளாவில் மசாஜ் எடுத்துக்கிட்டு இருக்கார்
   காலா ரிலீஸ் க்கு முதல் வந்து கலக்குவார் பாருங்க
   அப்போ ஒட்டு மொத்த தமிழ்நாடும் கதி கலங்கி போயிடும்

   இந்த வருண் ஒரு மனநோயாளி
   இவரை எல்லாம் சீரியஸாக எடுக்காதீங்க .. அனுதாபப்படுங்கள்

   Delete
  3. என்ன ராமன் அங்கிள்: அனானிக நாய்கள வச்சு கருத்துச் சொல்ல வர்ரவங்க- முக்கியமா உங்களூக்கு எதிரா- தனிநபர் தாக்குதல் செய்ய விடுறீங்க போல! இதுல மாடரேசன் வேற வச்சுக்கிட்டு???

   இதிலிருந்து உம் தரம் தெரியுது, அங்கிள். என்னை பொருத்தவரையில் நீர் ரொம்ப கேவலமான ஜென்மம். உம்மை அனானி தாக்கினால் குய்யோ முறயோனு கத்துறது.

   பேசுறது கம்யுனிசம்..ஆனா முழுக்க முழுக்க சுயநலம்தான் தெரியுது உம் பொதுநலத்தில்.

   எருமைமாட்டு வயசுல எது சரி எது நியாயம்னு தெரியலைனா உம்மைத்தாம் மொதல்ல கொளூத்தணூம்.

   இது வருண் கருத்துதான். எந்த அனானியும் இதை எழுதலை. நீர் நடத்துறது ஈனப்பொழைப்பு!

   Delete
  4. அந்த பின்னூட்டத்தை நீக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். உங்கள் தளத்தில் எழுதியுள்ள பதிவைப் படித்த பின்பு அந்த விமர்சனம் சரிதானோ என்று தோன்றுகிறது

   Delete
  5. அந்த பின்னூட்டத்தை போட்ட நம்பிக்கைராஜ் ஆகிய நான் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கியமைக்கு மன்னிப்பை கோருகின்றேன்
   ஆனால் கருத்தில் மாற்றமில்லை
   வருணை 2010 இல் தெரியும் .. அவர் உள சிக்கல் தொடர்பாக நன்கு தெரியும்
   அவரது வழமையான முறையை விட உங்களிடம் மிக மிக மிக நாகரீகமாகவே நடந்து கொண்டுள்ளார்


   Delete
 2. சிறப்பான கருத்து.

  ReplyDelete
 3. சூர்யா மனிதனாக சிந்தித்துள்ளார்.கமல் நடிகனாகவும் அரசியல் வாதியாகவும் பேசி உள்ளார்.வெல்டன் சூர்யா

  ReplyDelete
 4. தூத்துக்குடியவிடக் கொடுமை ஒரு மாவட்டத்துக்கே நடந்திருக்கு. இனியும் நடக்கும். இதெல்லாம் எப்போ நம்ம அறிவு கொழுந்துங்களுக்கு தெரியும்.

  ReplyDelete
 5. தான் வாழும் இடத்தில் நாயைப் பற்றியெல்லாம் எழுத நேரமிருக்கும்,ஆனால் சக தோழர் ஒருவர் செத்ததைக் கூட வெளியில் சொல்ல மறந்தவர்கள் நிறைந்த நாடிது.

  ReplyDelete
  Replies
  1. தோழர், நீங்கள் சொல்ல வருவதை நேரடியாக சொல்லுங்கள்

   Delete
  2. மோடியை பற்றி சொல்கின்றார் என்று நினைக்கின்றேன்

   Delete
  3. மோடியைப் பற்றியோ மூடியைத் பற்றியோ ஜால்ரா அடிக்க வரவில்லை. கருத்துகளில் தவறிருந்தால் மன்னிப்பு கேட்கலாம்.

   மரியாதையாக அழைத்தும் மதிக்கத்தக்க தெரியாத சிலருக்கு தோள் கொடுக்கிறேன் என்று பெயரில் மதியிழந்து நிற்பதுதான் தோழமைப் பண்போ

   Delete
  4. தோழர் மன்னிக்கவும். தொடக்கத்திலிருந்தே நீங்கள் பூடகமாக மட்டுமே பேசுகிறீர்கள். நீங்கள் சொல்ல வருவது என்ன என்பது என்னவென்று எனக்கு இப்போதும் புரியவில்லை.

   சொல்ல வருவதை தயவு செய்து நேரடியாக சொல்லுங்கள்.

   வருண் பின்னூட்டம் தொடர்பான கருத்து என்றால் என் பதில் ஒன்றுதான். ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்டு என்பது என் பாரம்பரியம் அல்ல. அடித்தால் திருப்பி அடி என்ற தோழர் சீனிவாச ராவின் மரபில் வந்தவன்.

   இன்னொரு விளக்கமும் அவசியம் என்று நினைக்கிறேன். அலுவலகப் பணி, தொழிற்சங்கப் பணி, இதற்கிடையில் உள்ள நேரம்தான் வலைப்பக்கத்திற்கு. அன்றைய தேதியில் எது அவசியம் என்று கருதுகிறேனே, அதை மட்டுமே எழுதுகிறேன். பதிவுகளின் நீளத்தையும் இப்போது குறைத்து விட்டேன்.

   Delete