Sunday, May 13, 2018

மோடிக்கு ஃப்ரான்ஸில் மூக்குடைப்பு



ஃப்ரான்ஸ் போன மோடிக்கு அங்கே நல்ல மூக்குடைப்பு கிடைத்திருக்கிறது.

"Le Monde" என்ற பத்திரிக்கையில் மோடியின் பேட்டி வருவதற்கான ஏற்பாடு நடந்திருக்கிறது.

அவர் அங்கே போனதற்குப் பின்பு நேரடி பேட்டி அளிக்க பயந்து பம்மியுள்ளார். கேள்விகளை எழுதிக் கொடுத்தால் அதற்கு பதில் அளிப்பதாகவும் அதை பிரசுரித்துக் கொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.

"நேரடியாக பேட்டி அளித்தால் அண்ணனின் பவுசு அம்பலமாகி விடும் என்பதையும் கேள்விகளுக்கு பதில் என்றால் அட்மின் எழுதிக் கொடுத்து விடுவார்"

என்பதை தனியாக வேறு எழுத வேண்டுமா?

"நேரடி பேட்டி இல்லாமல் இந்த கேள்வி பதில் சமாளிப்பெல்லாம் முடியாது. நீயும் வேண்டாம், உன் பேட்டியும் வேண்டாம்"

என்று அந்த பத்திரிக்கை மறுத்து விட்டது.

வேறு யாராவது மாட்டுவார்களா என்று பிரான்ஸ் நாட்டில் மோடி வகையறாக்கள் திரிகிறார்களாம் . . .

No comments:

Post a Comment