Tuesday, May 22, 2018

கொலைகாரனே பதவி விலகு . . .
இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அனைத்திற்கும் தமிழக அரசே பொறுப்பு. அமைதியாக போராடி வரும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி துப்பாக்கிச் சூடு மூலம் இதுவரை எட்டு பேர் இறக்க காரணம் கண்டிப்பாக எடப்பாடி அரசின் அடிமை புத்திதான்.

மாவட்ட ஆட்சியரும் எஸ்.பி யும் இன்று தூத்துக்குடியில் இல்லாததே நடந்த அராஜகம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கான சான்று. 

பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தூக்கி எறிந்த எலும்புத்துண்டுகளுக்காக தமிழக மக்கள் மீது தாக்குதல் நடத்திய அராஜகச் செயலை கண்டிக்கிறேன்.

ஓளிந்து வாழும் எஸ்.வி.சேகரை கைது செய்யத் துப்பில்லாத தமிழக காவல்துறை போராடுபவர்கள் மீது மட்டும் தன் வீரத்தைக் காண்பிக்கிறது.

நச்சைப் பரப்பும் ஸ்டெரிலைட் ஆலையை பாதுகாப்பதற்காக, வேதாந்தாவின் லாபம் பெருகுவதற்காக அப்பாவி மக்களின் மீது வெறியாட்டம் நடத்தியுள்ள எடப்பாடி ஒரு கொலைகாரனே.

தமிழர்களை கொன்று ரத்த ருசி பார்க்கும் வெறி பிடித்த மிருகங்களே, எடப்பாடியே, ஓ.பன்னீரே, தமிழகத்தை ஆளும் அருகதை உங்களுக்குக் கிடையாது.

உடனே பதவி விலகு . . .

ஸ்டெரிலைட் ஆலையை மூட வேண்டும் என்ற முழக்கத்தோடு கொலைகாரன் எடப்பாடியே பதவி விலகு என்ற முழக்கத்தையும் இணைத்தே எழுப்பிட வேண்டும்

11 comments:

 1. எவனாவது நாட்டோட வளர்ச்சிக்கு இந்த மாதிரி கம்பேனி வேண்டும்னு சொல்லி ஜல்லி அடிச்சானா, அவன கொண்டுபோயி கவர்மென்ட் ஆஸ்பத்திரி X-RAY மெசின்ல அரைமணி நேரம் expose பண்ணனும்.

  ReplyDelete
 2. ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டவுடன் பொட்டை ரெட்டயைர்கள் (Courtesy: மைலாப்பூர் மாபியா) மேல போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  ReplyDelete
 3. ஸ்ரில்லைட் ஆலைய மூடி அந்த இடத்துல இறந்தவர்களுக்கு நினைவிடம் அமைக்கவேண்டும்

  ReplyDelete
 4. happy to note rowdies and mafia groups instigated and supported by foreign money and evil groups(such as commies and NGO,jihad and conversion gangs) are eliminated. Disruptive forces deserve death. Too bad, only handful of thugs were removed. Government should not rest till last anti national is wiped out from India.

  ReplyDelete
  Replies
  1. You Scoundrel,
   YOU MUST BE SHOT DEAD. You Sanghis are not human

   Delete
  2. You Scoundrel,
   YOU MUST BE SHOT DEAD. You Sanghis are not human

   Delete
 5. டயர் நக்கிகள் என்றைக்கும் பதவியை விட்டு போகாதுங்க
  நாங்க தான் தொரத்தணும்
  சாத்வீக முறையில் போராடும் மக்களை கொலை செய்வதில் எந்த தமிழக கட் சியும் குறைந்தது அல்ல
  கீழ்வெண்மணி படுகொலை
  தாமிரபரணி படுகொலை - திமுக
  தூத்துக்குடி - அதிமுக

  சமவுடைமை கடசிகளே தமிழகத்துக்கு தேவை என்பதை நிரூபிக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. அன்சாரி முகம்மதுMay 23, 2018 at 1:56 PM

   திமுகவை இழுக்கலைனா போராளிகளுக்கு போராளிகளுக்கு தூக்கமே வராது
   முதலில் கம்யூனிச போராளிகள் கேரளாவிலாவது உங்க ஆட்சியை பாதுகாத்து கொள்ளுங்க அப்புறம் தமிழ்நாட்டுக்கு வரலாம்
   கம்யூனிச போராளிகள் இந்தியாவில் செய்த படுகொலைகளை பட்டியல் போட் டால் வாசிச்சு முடிக்க 2 மணிநேரம் எடுக்கும்

   Delete
 6. ஜெயலலிதா தான் செய்த ஊழலுக்காக தண்டணை பெற்றதை எதிர்த்து அதிமுகவினர் கலவரம் செய்தபோது வேடிக்கை பார்த்த தமிழக அரசும், போலீஸ்சும் இப்போது மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுள்ளார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்சாரி முகம்மதுMay 23, 2018 at 1:50 PM

   அதிமுக நாய்கள் அதுக்கு முன்பே
   3 அப்பாவி பெண்களை பஸ் ஒன்றுக்குள் வைத்து எரித்து கொன்றவர்கள்

   Delete
 7. இந்த மக்கள் அழியவேண்டியவர்கள்
  கூடங்குள்ம் உதயகுமாரை தேர்தலில் தோற்ககவைத்ததற்க்காக
  இந்த மக்கள் நேர்மையாள்ர்கள்
  500 ரூபாய் வாங்கிகொண்டு, திருடனை தேர்தலில் ஜெயிக்கவைத்தற்க்காக
  இந்த மக்கள் பேராசைகாரர்கள்
  பியை மொய்க்கும் ஈயைபோல இலவசங்களுக்கு அலைவதற்காக
  நான் (உங்கள் கட்சியில் சேர்ந்து) ஸ்டேரிலைட் ஆலைய மூடுவேண்னு வாக்குறுதி கொடுத்தால் இந்த இழிபிறவிகள் எனக்கு ஓட்டுபோட்டு ஜெயிக்கவைப்பார்கள் என்று உறுதிசொல்லமுடியுமா.

  ReplyDelete