Saturday, May 19, 2018

ஆளுனரை நீக்கு, அவைக்குறிப்பை நீக்கு . .


யெட்டி ராஜினாமா நல்ல விஷயம். 

நீண்ட  நாட்களுக்குப் பிறகு நடந்த நல்ல தரமான சம்பவம்.

பதினைந்து நாள் அவகாசம் இருபத்தி நான்கு மணி நேரமாக குறைக்கப்பட்டதால் குதிரை பேர டீலிங்கிற்கு வாய்ப்பில்லாமல் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவம்.

"அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்"

என்பது இப்போது யெட்டியை விட மோடியை விட

கர்னாடக ஆட்டுத்தாடிக்குத்தான் மிகவும் அசிங்கம்.

தன் விசுவாசத்தைக் காண்பிக்க யெட்டியை பதவியேற்க அழைத்த,

தன்னைப் போலவே இன்னொரு மோசடிப் பேர்வழியை தற்காலிக சபாநாயகரை நியமித்த

ஆளுனர், வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் அவரே ராஜினாமா செய்ய வேண்டும்.

அதெல்லாம் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

ராஜினாமா செய்வது என்று முடிவெடுத்த பின்பு எதற்கு உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்த வேண்டும்? அது எல்லாமே பொய், பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.

அவசியமற்ற அந்த உரை கர்னாடக சட்டப்பேரவை ஆவணங்களில் பதிவாக வேண்டிய அவசியமில்லை.

அதையும் நீக்கிட வேண்டும்.

இறுதியாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு ஒரு வார்த்தை.

உங்களுக்கான உண்மையான சோதனை இப்போதுதான் தொடங்குகிறது. அடிபட்ட நரி மூர்க்கத்துடன் திருப்பித் தாக்கும். உங்களின் ஒற்றுமை மூலமும் மக்களுக்கான நல்லாட்சி மூலமும்தான் இப்போது கிடைத்துள்ள வெற்றிக்கனியை தக்க வைத்துக் கொள்ள முடியும். 

அதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
4 comments:

 1. மோதி + அமித்ஷா + எடியூரப்பா +பாஜக ராஜதந்திரம். கர்நாடக தேர்தலில் பாஜக 104 இடங்களைப் பிடித்தவுடன் மிரண்டு போன காங்கிரஸ் , அதற்கு சற்றுமுன் வரை 15 பக்கம் ஊழல் குற்றச்சாட்டு கூறி ஒட்டு கேட்ட குமாரசாமியுடன் காங்கிரஸ் கைக்கோர்த்து கூத்தடித்தது. வெற்றி பெறுவது கடினம் என்றாலும் ஏன் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார்? இது பிஜேபிக்கு தேவையா ? இத்தனை வதந்திகளை சந்திக்க வேண்டுமா? ... இதன் பின்னணியில் மிகப் பெரிய ரகசியம் உள்ளது. அதென்ன ? மே 17 ந்தேதி எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றவுடனே ₹ 56000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டு உத்தரவிட்டார். முதலமைச்சராக பதவி ஏற்காவிட்டால் இதை செய்திருக்க முடியாது. விவசாயக் கடன் தள்ளுபடியின் பலன் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு முழு பலத்தைத் தரும். கர்நாடகாவில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும். மேலும் ஓட்டுக்காக தேர்தல் வரை லிங்காயத் சாதியினரிடம் தனி மதம், சிறுபான்மை அந்தஸ்து என பரிவு காட்டி அவர்களிடம் ஏமாந்து போன காங்கிரஸ் லிங்காயத் இனத்தில்(16 % மக்கள் ) மிகவும் செல்வாக்கு + பலம் வாய்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக தொடர விடாமல் கவிழ்த்து ஒக்கலிக்க இனத்தின்(9 % மக்கள்) குமாரசாமியை முதல்வராக்கி விட்டனர் என அவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பப் போகிறார்கள். இப்போ புரிந்திருக்கும் ஏன் எடியூரப்பா முதல்வரானார் என. இதுதான் ராஜதந்திரம். அரசியலில் என்ன வேணாலும்.. பொருத்திருந்து பார்ப்போம்...

  ReplyDelete
  Replies
  1. கேவலமான செயலுக்கு ராஜ தந்திரம் என்று பாராட்டுவது மிகவும் கேவலம்

   Delete
 2. CONGRESS AND JDS FOUGHT THE ELECTIONS AS SWORN ENEMIES AND ABUSED EACH OTHER WITH VERY STRONG WORDS. NOW THEY JOINED JUST TO KEEP BJP OUT OF POWER. BUT CONGRESS IS CONGRESS. IT WILL NOT ALLOW KUMARASAMY TO RULE FULL FIVE YEAR TERM. IT IS LIKE HIS FATHER DEVEGOWDA PROPPED AS
  PM FOR A SHORT TERM.

  ReplyDelete
 3. Why the BJP supporters accusing Cong + JD selectively forgot wheat they did is Goa and Meghalaya? In a big democratic country like India you will see these type of opportunistic moves, that too to overcome BJP's muscle and money power, supported by all Govt., missions like election commission, IT etc.,

  ReplyDelete