Saturday, May 5, 2018

பக்தர்களும் பக்தாள்களும்



மேலே உள்ள படம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவின் போது எடுக்கப்பட்டது. அமைதியாக நடந்து முடிந்த விழா அது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கூட லட்சக்கணக்கானவர் பங்கேற்ற போதிலும் எந்த சம்பவமும் இல்லாமல் அமைதியாகவே நடந்தது. 

சித்திரை முழு மதி நாளன்று கிரிவலத்துக்காக திருவண்ணாமலையில் இரண்டு லட்சத்திற்கு மேல் கூடியதாக சொல்கிறார்கள். அங்கேயும் சிறு அசம்பாவிதமும் கிடையாது.

பக்தர்கள் கூடும் நிகழ்வுகள் அமைதியாகவே நடந்து முடிகிறது.

ஆனால்

வினாயகர் ஊர்வலமோ, காவிகளின் ரத யாத்திரைகளோ அப்படி நடப்பதில்லை. பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக உள்ள போது வேறெப்படி இருக்கும். 

ஏனென்றால் இவர்கள் பக்தாள் எனும் அடியாள்.

பக்தி வேடம் அணிந்த வெறியர்கள்.

கடவுளும் காவிகள் பயன்படுத்தும் ஒரு ஆயுதம். 

அவருக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்!

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பதில் சொல்ல துப்பில்லை என்பது உன் வார்த்தைகளில் தெரிகிறது

      Delete
  2. True words.bakthi never hurts anybody.

    ReplyDelete
  3. பதிவில் உள்ள படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது.கடவுள் இந்திய மக்களுக்கு செய்யும் நன்மைகளுக்காக பக்தர்களும், பக்தாள்களும் இப்படி வருடம் ஒரு முறையல்ல மாதம் ஒரு முறை ஆற்றில் இறங்கும் விழா என்று விழாக்கள் எடுத்து கடவுளுக்கு நன்றி சொல்லி அவரை மகிழ்விக்கலாம்.
    தீங்கு செய்யாத போதை பொருள் உலகில் உண்டோ?
    போதையின் அளவை வைத்து தனக்கு மட்டுமே தீங்கிழைக்கும் அளவுக்கு போதை, மற்றவர்களுக்கும் தீங்கிழைக்கும் அளவுக்கு போதை என்பதை தீர்மானிக்கலாம்.

    ReplyDelete