Sunday, April 29, 2018

காக்கா பிரியாணி வேட்பாளர்கள் . . .


இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான இக்கட்டுரையைப் படித்ததும் எனக்கு "காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்கா வாய்ஸ் வராம உண்ணி கிருஷ்ணன் வாய்ஸா வரும்?"  என்ற விவேக் காமெடிதான் நினைவுக்கு வந்தது.

காமுகர்கள் நிறைந்த பாஜக கட்சியில் வேட்பாளர்கள் என்ன விவேகானந்தர்களாகவா இருப்பார்கள். அவர்களும் காமுகர்களாகத்தானே இருக்க முடியும் !!!!!






‘வஞ்சிக்கப்பட்ட’ பெண்களின் தேர்தல் பிரச்சாரம்
கர்நாடக பாஜக வேட்பாளர்கள் கலக்கம்




பெங்களூரு, ஏப். 28 -
கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று பாஜக துடியாய்த் துடிக்கிறது. ஆனால், பாஜக-வினரின் பழைய கால கதைகள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னுக்கு வந்து, அந்த கட்சியைக் கலங்கடித்து வருகிறது.பாஜக-வினரையும் பாலியல் குற்றங்களையும் பிரிக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், பாஜக வேட்பாளர்களின் பாலியல் மோசடிகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், கர்நாடகத் தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் இறங்கி யிருப்பது, அந்த கட்சியை தற்போது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

பாஜக வேட்பாளர்கள் ரேணுகாச்சாரியா, ராமதாஸ் ஆகியோரால் பாலியல் மோசடிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள்தான் தற்போது பாஜக-வுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருக் கின்றனர்.நர்ஸ் ஜெயலட்சுமி எனப் படும் ஜெயலட்சுமி, கடந்த 2007-ஆம் ஆண்டு எழுப்பிய குற்றச் சாட்டு, அன்று பரபரப்பான செய்தியாக இருந்தது. அதாவது பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த ரேணுகாச்சாரியா, தன்னுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், ஆனால் பின்னர் தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். ரேணுகாச்சாரியா தன்னை முத்தமிடும் புகைப்படங்களை யும் வெளியிட்டார். இதையடுத்து அமைச்சர் ரேணுகாச்சாரியா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. அதிகாரத்தில் இருந் ததால், அப்பிரச்சனையை பாஜக அமுக்கியது.பின்னர் ஜெயலட்சுமி, கடந்த2010-ஆம் ஆண்டு தனது புகாரைத் திரும்பப் பெற்றா லும், பெண்கள் முன்னேற்றக் கட்சிஎன்ற அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால், ரேணுகாச் சாரியாவுக்கு பாஜக மீண்டும் சீட்கொடுத்துள்ள நிலையில், அவரை எதிர்த்து தற்போது ஜெயலட்சுமி கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். 

இதேபோல பாஜக-வின் மற்றொரு அமைச்சரான ராமதாஸ் மீதும், கடந்த 2014-ஆம் ஆண்டு பாலியல் மோசடிப் புகார் எழுந்தது. அமைச்சர் ராமதாஸ் தன்னை திருமணம் செய்ததாகவும், பின்னர் அவர் ஏமாற்றிவிட்டதாகவும் பிரேமகுமாரி என்ற பெண்குற்றம்சாட்டினார். பத்திரிகை யாளர் சந்திப்பு நடத்தி அதிலும் உண்மைகளை போட்டு உடைத்தார். ஆனால், அதை பொய் என்றுகூறிய ராமதாஸ், தன்மீது தவறில்லை என்பதை நிரூபிப்பதற்காக தற்கொலை நாடகம் ஒன்றையும் நடத்தி, மருத்துவமனையில் படுத்துக் கொண்டார். இந்த பிரச்சனையும் பின்னர் அமுக்கப்பட்டது.ஆனால், ராமதாஸ் தேர்தலில் போட்டியிட்டால், அவரைஎதிர்ப்பேன் என்று அப்போதே கூறிய பிரேம குமாரி, சொன்ன படியே தற்போது கர்நாடகத் தேர்தலில் ராமதாஸூக்கு எதிராக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

பாஜக வேட்பாளர்களால் பாலியல் மோசடிக்கு உள்ளான பெண்கள், தற்போது தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்வது, பாஜக வேட்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.இது இரண்டு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை என்றாலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாஜக வேட்பாளர் களாக நிறுத்தியிருப்பது, மாநிலம் தழுவிய அளவில் அந்த கட்சிக்கு எதிரானதாகவும் மாறியிருக்கிறது. 

ஏற்கெனவே, சட்டப்பேரவைக்குள் ஆபாசப் படம் பார்த்த முன்னாள் அமைச்சர்கள் லக்ஷ்மன் சாவடி, பட்டீல் ஆகியோருக்கு பாஜக மீண்டும் சீட் அளித்துள்ள நிலையில், பாலியல் மோசடி குற்றச்சாட்டு இருப்போருக்கும் பாஜக சீட் வழங்கியிருப்பது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இதே போல காங்கிரஸ் ஆட்சியில் கலால்துறை அமைச்சராக இருந்த மேத்தி என்பவருக்கு எதிராக, அவரால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி என்பவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  மேத்தி - விஜய லட்சுமி தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டைப் பொறுத்தவரை வீடியோவே வெளியானது. மேத்தியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், சிஐடிபோலீசார், மேத்தி மீது குற்ற மில்லை என்று கூறிவிட்டனர். விஜயலட்சுமி மனமுடைந்து தற்கொலை அளவிற்கு சென்றார். அவர்தான் தற்போது மேத்திக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளார்.

தாமரையை தோற்கடிப்போம்..!
பாஜக ‘தொண்டர்’களும் களமிறங்கினர்

பாஜக-வுக்கு எதிராக வஞ்சிக்கப்பட்ட பெண்கள் ஒருபுறம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,“தாமரைக்கு வாக்களிக்காதீர்கள்; நோட்டாவுக்கு வாக்களியுங்கள்” என்று பாஜக தொண்டர்களே பாஜக-வுக்கு எதிராக சுவரொட்டி வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளனர்.குறிப்பாக, மைசூரு மற்றும் சாமராஜ் நகர் மாவட்டங்களில் பாஜக-வினர் ஒட்டியிருக்கும் போஸ்டர்களால், அந்த மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

வருணா தொகுதியில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திராவை எதிர்த்து எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த தொகுதியில் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்தது.முதலில், இவர்களை சமாளித்து விடலாம் என்றுதான் அந்த கட்சித் தலைமை கணக்குப் போட்டது. ஆனால், விஜயேந்திராவுக்காக, வருணா தொகுதியில் பாஜக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது, சக பாஜக-வினரை உசுப்பி விட்டுள்ளது. தற்போது அவர்கள், “தாமரைக்கு வாக்களிக் களிக்காதீர்கள், நோட்டாவுக்கு வாக் களிப்பீர்” என போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். போஸ்டரோடு நின்றுவிடாமல், நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்ற வாசகத்தை சமூக வலைத்தளங்களிலும் பாஜக-வினர் வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

1 comment:

  1. BJP definitely loose Karnataka because people start hating....But is there any advantage of communists...

    Praising others never strongly impresses the communists service in people mind ...These posts are just BJP hating mindset of loosers...Do positive communist services post to win people mind.

    ReplyDelete