Wednesday, April 25, 2018

பொறுப்பா பேசுய்யா வெங்காயம் . . .



தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மனுவை திங்கட்கிழமை அன்றே நிராகரித்து,  மூன்று நாட்களில் எடுக்கப்பட்ட முடிவை முப்பது நாள் அவகாசம் எடுத்து மிகவும் ஜிந்தித்து எடுக்கப்பட்டதாக கதை விடும் பெரிய மனிதரை மேலே உள்ள தலைப்பு சொல்வதாக யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

என்னதான் இருந்தாலும் ஒரு குடியரசுத் துணைத்தலைவரை எல்லாம் அப்படி சொல்ல மாட்டேன், அந்த பதவிக்கு சற்றும் தகுதியற்ற வெத்து வேட்டு, வேடதாரியாக இருந்தாலும் கூட.

பொறுப்பா பேசு என்று நான் பொதுவாக சொல்கிறேன்.


5 comments:

  1. அன்சாரி முகம்மதுApril 25, 2018 at 2:22 PM

    அதெல்லாம் இருக்கட்டும் சார்
    தேர்வு முடிஞ்சுது
    பார்ப்பன கம்யூனிஸ்ட் என்பதை மறுபடி நிரூபிச்சு இருக்கீங்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாமாம். அதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு என்ன கவலை?
      2 ஜி வழக்கில் இறுதித்தீர்ப்பெல்லாம் வேறு இருக்கிறது. தீபக் மிஸ்ராக்களின் தயவையெல்லாம் ஒதுக்கிட முடியுமா என்ன?

      அது சரி பார்ப்பன கம்யூனிஸ்டுகள் கையிலெடுக்கிற பல
      முக்கியமான சமூக நீதிப் பிரச்சினைகளைக் கூட
      திமுக திரும்பிப் பார்ப்பதில்லையே?

      Delete
    2. அன்சாரி முகம்மதுApril 26, 2018 at 7:26 AM

      2 ஜி வழக்கு யார் நீதிபதியாக இருந்தாலும் திமுகவுக்கு சாதகமாகவே வரும் .
      காங்கிரஸ் , பாஜக கும்பல்கள் திட் ட மிட்டு செய்த சதி

      எனக்கு ஒரு சந்தேகம்
      பா.கம்யூக்கள் திமுக ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் வென்ற ஒரே ஒரு சமூக பிரச்சினை சொல்ல முடியுமா ?

      கேரளா தவிர்ந்து பா கம்யூக்கள் செய்த சமூக விடுதலை சாதனை ஒன்றை தர முடியுமா ?

      Delete
  2. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வழக்கறிஞர் பிரதாபனின் பதிவு , திமுக அதிமேதாவிகளின் அவதூறுப் பிரச்சாரத்திற்கு பதில் சொல்கிறது.

      முடிந்தால் பதில் சொல்ல முயலவும்.

      பொதுவாக இணையத்தில் உள்ள பதிவர்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பது என் வழக்கமில்லை. விதிவிலக்காக சிலரை அழைப்பது உண்டு.அந்த வகையில் நம்ம #ஸ்டாம்புசித்தர் ஒருவர்.

      கடந்த 22 ம் தேதி மார்க்ஸிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு முடிந்த உடன், அரசியல் தலைமைக்குழுவில் பிறப்பால் தலித்தான ஒரு கம்யூனிஸ்ட் இடம்பெறவில்லை என்று, ஒட்டுமொத்த கட்சியையும் பார்ப்பான் கட்சி என எழுதியதோடு, #செவ்வாழைகள் என செம்படையை அழைத்தார் . டான் அசோக் எனும் ஸ்டாம்பு சித்தர்.

      உரிய விளக்கம் அளித்த பின்பும் அந்த தாக்குதல் தொடர்ந்தது.

      தலித் சமூக தோழர்கள் மீதான அக்கறையில் எழுதப்பட்ட பதிவு அல்ல அது. அவ்வாறு அக்கறையுடன் எழுதிய பல தோழர்களின் பதிவில் நான் தலையீடு செய்யவோ, விளக்கமளிக்கவோ முற்படவில்லை. ஏனென்றால் அந்த தோழர்களின் விமர்சனம், எங்களை மேம்படுத்த உதவும்.

      ஆனால், ஸ்டாம்புசித்தரின் விமர்சனம், வயித்தெறிச்சலில் வெளிப்பட்ட ஒன்று. எங்கு தான் சார்ந்த இயக்கமான திமுகவை நோக்கி கேள்வி எழுப்பிவிடுவார்களோ எனும் வேகத்தில் திசை திருப்ப எழுதப்பட்டது.

      நேற்று முன் தினம், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தீர்ப்பைக்கண்டித்து சென்னையில் அம்பேத்கரியர்களின் மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியை எங்கள் தீக்கதிரில் நேற்று சென்னை பதிப்பிலும், இன்று அனைத்து பதிப்பிலும் வெளியீடு செய்துள்ளோம்.

      ஆனால், முரசொலியில் பெட்டி செய்தி கூட இல்லை. அவ்வளவு ஏன், தமிழகமே திரும்பிப்பார்க்க வைத்த #உடுமலைசங்கர் ஆணவக்கொலைவழக்கின் தீர்ப்பைப்பற்றிக்கூட இன்றுவரை ஒரு சிறு செய்தி முரசொலியில் வெளியாகவில்லை.

      ஆனால் இதையெல்லாம் கேள்விக்கேட்க டான் அசோக்கிற்கு நேரம் அமைந்ததில்லை.

      நேற்று முந்தினம் டெக்கான் கிராணிக்கள் நாளிதழில் ஒரு செய்தி, திமுகவில் உள்ள 65 மாவட்ட செயலாளிரில் ஒருவர் மட்டுமே தலித் சமூகம்.

      அதற்கு விளக்கமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை செயலாளர்களில் ஒருவர் தலித் ஆக இருக்கவேண்டும் என்பது வழிகாட்டுதல் என்கிறார்கள். அதாவது மாவட்ட செயலாளர் ஆகிடக்கூடாது என்பதற்கு உருவாக்கப்பட்டதுதான் இந்த கோட்டா சிஸ்டம்.

      ஆனால் எங்கள் இயக்கத்தில் அப்படி அல்ல, எந்த தடையும் இல்லை.

      மாநில அளவில் முடிவெடுக்கும் குழு மாநில குழு, அகில இந்திய அளவில் மத்தியக்குழு. இவ்விரண்டு குழுக்களில் பிறப்பால் தலித் சமூகத்தைசார்ந்த் பல தோழர்கள் இருக்கிறார்கள்.

      பொலிட்பீரோ என்பது இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் மத்தியக்குழு கூட்டத்திற்கு இடையில் ஏற்படும் அரசியல் முடிவுகளில் தலையிடும் குழு. அவ்வளவே.!

      பொலிட்பீரோவிற்கு., ஒரு கட்சித்தோழர் மீது நடவடிக்கை எடுத்து வெளியேற்றும் அதிகாரம் கூட இல்லை.

      ஆனால், தனி நபர் கட்சிகளில் அனைத்து முடிவுகளும் தனி நபர் எடுப்பதே. அதில் எவ்வித பங்களிப்பும் மற்ற நிர்வாகிகளுக்கு இருக்காது.

      ஆனால், எங்கள் கட்சியில் அனைத்து முடிவுகளும் கூட்டு முடிவு. தனிநபர் முடிவிற்கு இங்கு வேலையே இல்லை.

      தற்போதைய கட்சி மாநாடே அதை நிரூபித்துள்ளது.

      ஆனால், எங்களுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும், குறிப்பாக சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் சாதிய பிரச்சனை, தீண்டாமை கொடுமை, ஆணவ கொலையில் சிபிஎம் தலையீடு அதிகரித்துவருவதை தடுக்கும் நோக்கத்துடனே, இவ்வாறான அவதூறு பிரச்சாரம் திட்டமிட்டு, டான் அசோக், கிளிமூக்கு அரக்கன் போன்றோரால் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது, தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் செயல்பாடின்மையை மறைக்க பயன்படுத்தப்படுகிறது.

      இந்த சதியை எல்லாம் மீறியே நாங்கள் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே நிற்போம்!

      தமிழகத்தில் சானிப்பால் சவுக்கடிக்கு எதிராக போராடியது கம்யூனிஸ்ட் கட்சித்தான். திமுகவோ அல்லது திராவிட கட்சிகளோ இல்லை. அக்கட்சியை அசிங்கப்படுத்த நீங்கள் எடுத்த ஆயுதம் பார்ப்பான் கட்சி!

      Delete