Monday, April 2, 2018

எடப்பாடிக்கு எதற்கெய்யா வெட்டி வீரம்????



தமிழக வரலாற்றிலேயே மிக மோசமான ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

நடிகரால் துவக்கப்பட்டு பின்பு இன்னும் ஒரு நடிகையால் வழி நடத்தப்பட்ட  கட்சி என்பதால் இப்போது இருப்பவர்களுக்கும் நடிப்பு இயல்பாகவே வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று டெல்லியில் நாடாளுமன்றத்தில் நடத்தும் முடக்கல் நாடகம் எல்லாம் மோடி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்திற்கு வரக்கூடாது என்பதற்காக  பாஜக இயக்க இவர்கள் நடத்துகிற  நாடகம் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மைனாரிட்டியாக பாஜக மாறியுள்ள சூழலில் அதிமுகவின் எதிர்ப்பு உண்மையாக இருந்தால் மத்தியரசு இந்நேரம் பணிந்திருக்கும்.  அவர்கள் எழுதிய வசனத்தை இவர்கள் ஒப்பிப்பதால்தான் மத்தியரசு பிடிவாதமாக இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுகவிற்கு  உண்மையிலேயே அக்கறை இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சிகளும் மற்ற அமைப்பினரும் நடத்தும் போராட்டங்களை காவல்துறை கொண்டு ஒடுக்காமல் இருக்க வேண்டும்.

அவர்கள் நாடாளுமன்றத்தில் நடத்தும் போராட்டம் நியாயம் என்றால் மக்கள் தமிழகத்தின் வீதிகளில் நடத்தும் போராட்டமும் நியாயம்தானே! அது மட்டும் ஏன் இவர்களுக்கு கசக்கிறது? மத்தியரசிற்கு எதிரான குரலை ஒடுக்க முயல்கிறது? போராட்டங்கள் வலிமையாகும் போது கிடைக்கிற அழுத்தம் இவர்கள் என்ன காரணம் சொல்லி மக்களவையை முடக்குகிறார்களோ, அது நிறைவேற உதவிகரமாக இருக்குமல்லவா?

இப்போது உண்ணாவிரதம் என்று புதிய நாடகத்தை துவக்கி உள்ளார்கள். அதற்குப் பதிலாக கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கலாமே!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியரசு மறுப்பது கர்னாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக  மட்டுமே. தங்களின் புதிய ஆண்டையான மோடியின் நலனே இந்த அடிமைகளுக்கு முக்கியமே தவிர தமிழக விவசாயிகளின் நலன் அல்ல.

எடப்பாடி உள்ளிட்ட எவருமே அடுத்த தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. அது அவர்களுக்கும் நன்றாக தெரிவதால் ஆட்சியின் முழுக்காலத்தையும் அனுபவிக்கவும் அதன் மூலம் கோடி கோடியாக கொள்ளையடிக்கவுமே விரும்புகிறார்கள்.

"படுத்தே விட்டேனாய்யா" என்ற லெவலில் மண்டியிட்டுக் கிடக்கிற எடப்பாடி வகையறாக்கள் உண்ணாவிரத நாடகம் நடப்பது யாரை ஏமாற்ற?

இவர்களின் நடிப்பை கொஞ்சம் கூட சகிக்க இயலவில்லை. நாடகம் எவ்வளவு விரைவாக முடிகிறதோ அதுதான் தமிழகத்திற்கு நல்லது.



6 comments:

  1. எடப்பாடி ஆட்சி, அந்த நடிகை ஆட்சியை விட கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
    நடிகை ஆட்சி ரொம்ப கேவலமாக இருந்தாலும், மீடியாக்களும், நடிகர்களும் துணிந்து விமர்சிப்பதில்லை.
    எடப்பாடி ஆட்சி 'ஒரளவு பரவாயில்லை' ரகமாக இருந்தாலும், மீடியாக்களும், நடிகர்களும் கடுமையாக தாக்குகின்றனர்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. அந்த உண்ணாவிரதப் படத்தை வச்சி ஒரு பதிவு வருமா? சிப்பாய் புரட்சி நடந்த பூமியிலிருந்து வரலாறு முக்கியமில்லையா? அல்லது இன்னும் அந்த படத்தை பார்க்க வில்லையா?.

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ அது என்ன படம்?
      நான் பார்க்கவில்லையே!
      முடியுமானால் அனுப்பி வையுங்களேன்

      Delete
  5. EPS ம்ற்றும் OPS எவ்வளவு நாளைக்கு தப்பிக்க முடியும். மைலாப்பூர் மாஃபியா எவ்வளவு நாளைக்கு இதுங்களுக்கு கேரண்டி/வாரண்டி கொடுத்திருக்கான்.

    ReplyDelete