Wednesday, January 6, 2016

மூடர்களுக்கு இப்போது வேறு பெயர் !



இத்தனை கோடி ரூபாயை வாங்கிக் கொண்டும் . . .



மேலேயுள்ள படம் நேற்று எடுக்கப்பட்டது. எல்.ஐ.சி நிறுவன உயரதிகாரிகள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லியை சந்தித்து கடந்த 2014 – 2015 நிதியாண்டிற்கான எல்.ஐ.சி யின் லாபத்தில் மத்திய அரசின் மூலதனத்திற்கான பங்குத்தொகையான 1804.35 கோடி ரூபாய்க்கான  காசோலையை வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. எல்.ஐ.சி யின் கடந்தாண்டு லாபத்தில் ஐந்து சதவிகிதம்தான் ரூபாய் 1804.35 கோடி ரூபாய். முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் லாபத்தில் மீதத் தொகை பாலிசிதாரருக்கான போனஸ் கணக்கில் சேர்க்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் எல்.ஐ.சி மத்தியரசுக்கு இப்படித்தான் பல கோடி ரூபாய்களை லாபத்தின் பங்காக வழங்கி வருகிறது. ஐந்து கோடி ரூபாய் மூலதனத்திற்கு ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய். இது மட்டுமா வருமான வரியாக, நிறுவன வரியாக, சேவை வரியாக பல்லாயிரம் கோடி ரூபாய்கள் முழுமையாக பாக்கி வைக்காமல் கொடுக்கப்படுகிறது.

அதோடும் நின்று போவதில்லை. அரசின் பத்திரங்களில் முதலீடு, கடனுதவி என்றெல்லாம் எல்.ஐ.சி யிடம் அரசு கை நீட்டி வாங்கிக் கொண்டே இருக்கும்.

இன்னும் சொல்லப்போனால் மாநகரங்கள் தொடங்கி சிற்றூர் வரை தனது கட்டிடங்களுக்காக முறையாக சொத்து வரி கட்டுகிற நிறுவனமும் எல்.ஐ.சி தான். ஊழியர்களிடம் பிடிக்கிற சொத்து வரி முறையாக நகராட்சி, மாநகராட்சிக்கும் சென்று விடும்.

இப்படி படியளிக்கிற வள்ளலை ஒரு அரசு பாராட்டி, சீராட்டி, போஷாக்கு ஊட்டி, பேணிப் பாதுகாக்க வேண்டாமா?

ஆனால் தனியார் நிறுவனங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி யை எந்த அளவிற்கு பலவீனமாக்க முடியுமோ, அதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிற அரசு இந்த அரசு. மன்மோகன் அரசும் அது போன்றதுதான்.

தங்க முட்டை இடுகிற வாத்தை அறுக்கிற மூடர்கள் கதைகளில் மட்டும் கிடையாது. நம் கண் முன்னாலும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பெயர் மத்திய அரசு.

4 comments:

  1. like BSNL, insiders (govt) are trying to destroy LIC. but god grace ,opp. team not much strong enough. this is the main reason lic still in rank 1.

    seshan

    ReplyDelete
  2. மூடர்கள் அல்ல, திருடர்கள்

    ReplyDelete
  3. இத்தனையும் யாருடைய காசு. மக்கள் கட்டும் பிரிமியம் தான். 30 வருடம் ஒழுங்காக பிரிமியம் கட்டி கையில் வாங்கும் தொகை மதிப்பில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுகிறது. ஒரு R D அக்கவுண்டில் போட்டிருந்தால் கிடைக்கும் தொகை பன்மடங்கு கூடுதல் கிடைக்கும். இதைச் சொன்னால் இன்சூரன்ஸ் என்று சொல்கிறார்கள். என்னவோ இன்சூரன்ஸ் எல்லாம் ஒரு ஏமாற்று வேலையாகவே எனக்குப் படுகிறது.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. மக்களின் பணத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறோம் என்பது ஒரு விஷயம். இன்னொன்று காப்பீடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

      Delete