இன்று செய்யாறு சென்றிருந்தேன். அப்போது சில இடங்களில் புத்தம்புதிதாக
பச்சை நிறத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டிகள் கண்ணைக் கவர்ந்தன. சட்டமன்ற
உறுப்பினரின் தொகுதி நிதியிலிருந்து வாங்கப்பட்ட குப்பை வண்டிகள் என்று எழுதப்பட்டது
மட்டுமல்லாமல் தமிழக முதல்வரின் படமும் அவற்றில் ஒட்டப் பட்டிருந்தது.
குப்பை வண்டியாக இருந்தாலும் கூட அதிலே தங்கள் தலைவியின் படத்தை போட
வேண்டும் என்ற அடிமை மனோபாவத்திற்கு அதிமுக ஆட்கள் வந்து விட்டார்கள் போல. எதுவாக
இருந்தாலும் அதிலே தனது படம் இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் ஏதாவது உத்தரவு போட்டிருப்பாரோ?
இந்த ஆட்சியை மக்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடம் அதுதான்.
பின் குறிப்பு 1 : அந்த சட்டமன்ற உறுப்பினர் யாரென்று சொல்லவில்லை அல்லவா?
ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றபோது அமைச்சராக பதவியேற்கையில் ஓவர் அழுகாச்சி சீன்
போட்டாரே முக்கூர் சுப்ரமணியம் அவர்தான் அந்த அம்மா விசுவாசி!
பின் குறிப்பு 2 : பேருந்தில் சென்று கொண்டிருந்ததால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் குப்பைத் தொட்டியில் ஜெ ஸ்டிக்கர் ஒட்ட விரும்பவில்லை. ஆகவே இரண்டு படங்கள் உள்ளது.
//ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றபோது அமைச்சராக பதவியேற்கையில் ஓவர் அழுகாச்சி சீன் போட்டாரே முக்கூர் சுப்ரமணியம்//
ReplyDeleteஇவர் வேறு இருக்கிறாரா! இவர் போட்ட சீனை நான் பார்க்கவில்லை, இருந்தாலும் சோக காட்சிகளில் தோன்றுவதற்கு ஓபிஎஸ்ஸை அடிக்க ஆள் கிடையாது என்பது என் நம்பிக்கை.