Friday, January 1, 2016

இனிப்போடு தொடங்குது இந்த ஆண்டு

2016 ம் ஆண்டின் முதல் பதிவாக என்ன எழுதலாம் என்று யோசித்த போது ஏன் இந்த ஆண்டின் முதல் பதிவை இனிப்பாக துவக்கக் கூடாது என்று தோன்றியது.

ஆகவே அதை செயல்படுத்த செய்த இனிப்பு  இங்கே.

பிரெட்டை சிறிய துண்டங்களாக வெட்டி எண்ணையில் போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

முந்திரி பருப்பையும் நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தை சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வறுத்த பிரெட் துண்டங்கள் மீது காய்ச்சிய பாலை ஊற்றி ஒரு இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு ஊற வைத்த பிரெட்டோடு சர்க்கரை சேர்த்து கிளறவும். பிரெட்டின் வடிவம் மாறிப் போய் நன்றாக சேர்ந்து வரும் போது கொஞ்சம் கேசரி கலர் பவுடர் சேர்க்கவும். பிறகு நெய் ஊற்றி நன்றாக கிளறவும். நெய் கொஞ்சம் நேரத்தில் கக்கிக் கொண்டு வரும். 




அப்போது முந்திரி, பேரிச்சம் பழம், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து இறக்கி வைத்து விடவும்.

சுவையான பிரெட் அல்வா தயார்.




எப்படி இருந்தது என்று சொல்லவேயில்லையே என்று மனைவியிடம் கேட்டேன். நீங்கள் கொடுத்ததை முழுதாக சாப்பிட்டேனே, நன்றாக இல்லாவிட்டால் ஒரு கப்பையும் சாப்பிட்டிருப்பேனா என்றார்கள்.

சரி, இந்த கமெண்ட் போதும்.

அனைவருக்கும் இந்த ஆண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

 

3 comments:

  1. கடைசிபடத்தை பார்த்தா இந்த வருடம் இனிப்பாக தான் இருக்க போகிறது.
    நீங்க கொடுத்ததை உங்க மனைவி முழுதாக சாப்பிட்டடதாலும், கடைசி படத்தை பார்க்கும் போது ஆசை ஏற்படுவதாலும் நேரம் கிடைத்ததும் முதலில் செய்ய போவது பிரெட் அல்வா தான். முதலாவது படத்தில் உள்ள பிரட் அளவுக்கு ஊறவைக்க இரண்டு கிளாஸ் பால் போதுமா?

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. இரண்டு கிளாஸ் பால்தான் நான் ஊற்றினேன்

      Delete
  2. ப்ரெட் பாக்கெட் வாங்கி 3 நாளாகிறது. இன்னும் உபயோகப்படுத்தாதது ஞாபகம் வந்துவிட்டது. இதை பண்ணிப் பார்த்துவிடவேண்டியதுதான். உங்களுக்குக் கிடைத்ததுபோல் கினிபிக் யாருன்னு யோசிக்க ஆரம்பிச்சாச்சு.

    படம் நன்றாக உள்ளது. புத்தாண்டை சிறப்பாக ஆரம்பித்துவைத்துள்ளீர்கள்.

    ReplyDelete