மேலேயுள்ள படத்தில் இருப்பது என்ன சொல்லுங்கள் பார்ப்போம்.
இது ஒன்றும் ஏதோ ஒரு பானமோ இல்லை எண்ணெயோ இல்லை.
சமையலில் போடுவதற்கு வேர்கடலை நன்றாக வேக வேண்டும் என்பதற்காக என் மனைவி சுடு நீரில் கொஞ்ச நேரம் ஊற வைத்தார்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் இப்படி செந்நிறத்தில் தண்ணீர் இருந்தது.
மற்ற சில பொருட்களில் சாயம் ஏற்றுவது போல வேர்கடலையிலும் சாயம் ஏற்றுகிறார்களா என்று ஒரு சந்தேகம் உள்ளது.
இயற்கையிலே கூந்தலுக்கு மணம் உண்டா என்று பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் போல இயற்கையிலேயே வேர்கடலைக்கு அப்படி ஒரு நிறம் உண்டா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விஷயம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்.
கோது உடைத்து தோல் நீக்காத வேர்க்கடலையாய் இருந்தால், தோலின் நிறமாக இருக்க வாய்ப்புண்டு. யோகன் பாரிஸ்
ReplyDeleteதோலின் நிறம்தான். வேர்க்கடலையில் நிறம் சேர்க்கும் எண்ணம் இதுவரை நம் விவசாயிகளுக்கு வந்ததில்லை. நீங்கள் எடுத்துக்கொடுத்துவிட்டீர்கள். இனி என்னாகப்போகிறதோ...
ReplyDelete