Monday, January 18, 2016

இவர் அப்போதே இப்படித்தான்




ஐ.எஸ்.ஆர்.ஓ நிறுவனத்தின் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ் மேடையில் சுயம்சேவக்காக மோகன் பகவத் பக்கத்தில் நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதை பலரும் அதிர்ச்சியோடு கேள்வி கேட்டிருந்தார்கள்.

ஆனால் இதிலே எனக்கு எந்த அதிர்ச்சியும் கிடையாது. அறிவியலராக இருந்தாலும் அதற்கு கொஞ்சமே சம்பந்தம் இல்லாமல் நடந்து கொண்டவர் அவர் என்பது நினைவில் உள்ளதல்லவா?

நிலவிற்கு அனுப்பப்பட்ட "சந்திராயன்" விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக  அதன் மாதிரியை திருப்பதிக்கு கொண்டு வந்து பூஜை நடத்திய மனிதர் அவர். அவருக்குள் இருந்த காவி நிறம் அப்போதே வெளிப்பட்டு விட்டது.



பதவிக்காலம் முடிந்து விட்டதால் இப்போது தான் ஒரு காவி டவுசர் என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டார். 

இருக்கட்டுமே, இதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா?

அதெல்லாம் ஒன்றுமில்லை,

என்ன?
 

இவரைப் போன்றவர்கள் அறிவியல் அமைப்புக்களின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்தால் பிரம்மாஸ்திரம்,  புஷ்பக விமானம், பிள்ளையார் பிறப்பு என்று எல்லா கற்பனைக் கதைகளையும் அறிவியல் உன்னதம் என்று கதை கட்டுவது சுலபமாகிவிடும். 

2 comments:

  1. அறிவியல், ஆன்மீகம், அரசியல்...வேதனை.

    ReplyDelete
  2. அறிவியலாளர்கள் பூசை செய்வது வேதனைக்குரிய செய்தி ஐயா

    ReplyDelete