Saturday, January 2, 2016

26,737 கிலோ மீட்டரும் 11,830 பக்கங்களும்





பொதுவாக புத்தாண்டு சபதங்கள் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் ஒரு பழக்கத்தை விட்டு விடுவதாக சில வருடங்களில் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியாத காரணத்தால் எதற்கு வம்பு என்று அந்தப் பக்கமே செல்வதில்லை. “ஏதேனும் புத்தாண்டு சபதம் உண்டா?” நேற்று என் மகன் கூட கேட்ட போது “சபதங்கள் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை என்று வேண்டுமானால் சபதம் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். இது பழைய மொக்கை ஜோக் என்று சொல்லி விட்டான்.

சபதம் என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த வருடம் ஒரு முடிவு எடுத்தேன். மதுரைத் தோழர் ச.சுப்பாராவ் தான் ஒவ்வொரு நாளும் என்ன படிக்கிறேன், எவ்வளவு பக்கங்கள் படிக்கிறேன் என்பதை பதிவு செய்கிறார் என்ற தகவல் மிகவும் வசீகரித்தது. அன்றாடம் படிப்பதை பதிவு செய்வது சாத்தியமில்லை என்பதால் கடந்தாண்டு படிக்கும் புத்தகங்கள் பற்றிய விபரங்களையாவது பதிவு செய்து கொள்வோம் என்று முடிவெடுத்தேன். அதை வெற்றிகரமாக அமலாக்கியும் உள்ளேன்.

அதன் படி கடந்தாண்டு நான் படித்தது 64 புத்தகங்கள். அதன் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். அதன் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 11,830. 

நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், இயக்கப் பிரசுரங்கள், ஆவணங்கள் ஆகியவையெல்லாம் இந்த கணக்கில் வராது.

தலைப்பில் கிலோ மீட்டர் என்று உள்ளதே என்று நீங்கள் கேட்பது காதில் ஒலிக்கிறது.

கடந்த ஆண்டில் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளேன். மொத்தம் 62 பயணங்கள் நடந்துள்ளது. அதில் 45 பயணங்கள் ஒரே நாளில் முடிந்துள்ளது. நீண்ட தூர பயணம் என்பது மே மாதம் புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றதுதான். மொத்தமாக பார்த்தால் கடந்தாண்டில் 93 நாட்கள் பயணத்தில் கழிந்துள்ளது.

பயணத்திற்கும் நூல்கள் படித்ததிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால் பெரும்பாலான நூல்களை படித்து முடித்ததே பயணங்களின் போதுதான். இவற்றில் பதினைந்து நூல்கள் பற்றிய எனது கருத்துக்களை வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்த ஆண்டும் மாறுபட்டதாக இருக்காது என்று நம்புகிறேன். ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை மூன்று பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

நூறு பக்கங்கள் மட்டும் படித்து நீண்ட வருடங்களாக தொடப்படாத ஆயிரம் பக்க “காவல் கோட்டம்” தோழர் ச.சுப்பாராவ் தமிழாக்கம் செய்துள்ள “இடது திருப்பம் எளிதல்ல” உள்ளிட்ட பல நூல்கள் இன்னும் படிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரலில் சென்னை புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அத்தனையையும் முடித்து விட வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

இதோ கடந்தாண்டில் நான் படித்து முடித்த நூல்களின் பட்டியல். இவற்றில் **** என்று போட்டுள்ளது பரிசாகக் கிடைத்தவை. *** என்று போட்டுள்ளது இரவல் வாங்கிப் படித்து திருப்பிக் கொடுத்தது. மற்றவை நான் பணம் கொடுத்து வாங்கியவை. எந்த ஒரு நூலையும் யாரிடமிருந்தும் சுடுவதற்கான வாய்ப்பு மட்டும் பல வருடங்களாக கிடைக்கவேயில்லை. 
 

Sl No Name Author Type Pages Cost
1 இசையாலானது கிருஷ்ணா டாவின்ஸி வாழ்க்கை வரலாறு 96 50
2 காட் ஃபாதர்  மரியோ பூ்ஸோ திரைக்கதை 200 200
3 மாதொருபாகன் பெருமாள் முருகன் புனைவு 190 175
4 நயாகாராவில் மாயாவி   காமிக்ஸ் 128 50
5 அனிதா இளம் மனைவி சுஜாதா மர்ம்ம் 158 90
6 பெய்ரூட்டில் ஜானி   காமிக்ஸ் 130 50
7 எரியும் பனிக்காடு பி.எச்.டேனியல்/முருகவேள் புனைவு - தமிழாக்கம் 336 200
8 கடல் சமஸ் சமூகம் 200 180
9 மெல்ல விலகும் பனித்திரை லிவிங் ஸ்மைல் வித்யா திருநங்கையர் சிறுகதைகள்  80 50
10 அல்ங்காரப்பிரியர்கள் சு.வெங்கடேசன் சமூகம் - கட்டுரைகள் 127 90
11 தோட்டியின் மகன் தகழி சிவசங்கரப் பிள்ளை நாவல் - சமூகம் 173 150
12 தீண்டும் இன்பம் சுஜாதா நாவல் -புனைவு 224 125
13 பதேர் பாஞ்சாலி சத்யஜித்ரே - செழியன் திரைக்கதை 93 75
14 சந்தித்தேன் ச.தமிழ்ச்செல்வன் நேர்முகங்கள் 111 60
15 சஞ்சாரம் எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் -புனைவு 375 370
16 அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புக்கள் கே.சந்துரு தீர்ப்புக்கள் - கட்டுரைகள் 116 95
17 மேலும் ஒரு குற்றம் சுஜாதா நாவல் -புனைவு 111 60
18 ஜன்னல் மலர் சுஜாதா நாவல் -புனைவு 78 50
19 நோயர் விருப்பம் டாக்டர் ஜி.ராமானுஜம் கட்டுரைகள் -நகைச்சுவை 80 50
20 கோவில்கள், மசூதிகள் அழிப்பு அ.அன்வர் உசேன், வெ.பத்மனாபன் மத வெறி - கட்டுரைகள் 96 70
21 நெப்போலியனின் கடிதம் சத்யஜித்ரே மர்ம்ம் - நாவல் 78 50
22 கூளமாதாரி பெருமாள் முருகன் நாவல் -புனைவு 302 275
23 விரும்பிச் சொன்ன பொய்கள் சுஜாதா நாவல் -புனைவு 88 50
24 லெனின் வெ.மன்னார் வாழ்க்கை வரலாறு 32 25
25 அருந்தவப்பன்றி சுப்ரமணிய பாரதி பாரதி கிருஷ்ண குமார் பாரதி வாழ்க்கை 148 200
26 கட்டியக்காரன் முகில் இலக்கியக் கட்டுரைகள் 160 130
27 பட்டத்து யானை வேல ராம்மூர்த்தி நாவல் - புனைவு  376 300
28 ரஃப் நோட்டு *** ஆயிஷா நடராஜன் குழந்தை நாவல் 50 60
29 சிவாஜி - வரலாற்றின் வரலாறு *** கே.சந்திரசேகரன் வாழ்க்கை வரலாறு 432 180
30 வித்தகர்கள் **** கரந்தை ஜெயகுமார் வாழ்க்கை வரலாறு 60 60
31 பனைமரக்காடு **** ஈழபாரதி கவிதை 62 70
32 மௌனத்தின் சாட்சியங்கள் சம்சுதீன் ஹீரா நாவல் - புனைவு  454 350
33 அரசியல் பேசும் அயல் சினிமா இ.பா.சிந்தன் திரைப்பட ஆய்வு 192 140
34 பற்றி எரியும் பாலஸ்தீனம் கி.இலக்குவன் அரசியல் 71 60
35 ஜெய்லலிதா வழக்கு வெ.ஜீவகுமார் அரசியல் 64 40
36 விசுவாசமின் சகவாசம் விசு "Awesome" நகைச்சுவை பதிவுகள் 303 180
37 பம்பாய் கொள்ளையர்கள் சத்யஜித்ரே மர்ம நாவல் 102 70
38 கனம் கோர்ட்டார் அவர்களே நீதிபதி கே.சந்துரு கட்டுரைகள் - சட்டம்  263 225
39 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனைச் சரித்திரம் அருணன் அரசியல் 63 35
40 அக்னிச் சிறகுகள் **** அப்துல் கலாம் சுய சரிதை 374 130
41 தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்        
  இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்.ராமகிருஷ்ணன் அரசியல் 592 500
42 களப்பணியில் கம்யூனிஸ்டுகள் ஜி,ராமகிருஷ்ணன் அரசியல் 352 250
43 ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் க.பஞ்சாங்கம் நாவல் - புனைவு  208 150
44 கிராம்ஷியின் சிந்தனைப்புரட்சி இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் அரசியல் 102 60
45 சாப்பாட்டுப் புராணம் சம்ஸ் கட்டுரைகள் - உணவு 112 80
46 கோபல்ல கிராமம் கி.ராஜ நாராயணன் நாவல் - புனைவு  176 120
47 கல்கா மெயிலில் சம்பவம் சத்யஜித் ரே மர்ம நாவல் 110 70
48 பசவபுன்னையா நினைவலைகள் கி.ரமேஷ் (தமிழில்) பேட்டி - அரசியல் 111 70
49 உணவு யுத்தம் எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் - உணவு 278 240
50 உலக சினிமா செழியன் கட்டுரைகள் - உலக சினிமா 256 125
51 காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் ஞானி (தமிழில்) பேட்டி - அரசியல் 48 10
52 ஜின்னாவின் டைரி கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் - புனைவு  174 150
53 சாமானியனின் முகம் சுகா கட்டுரைகள் 232 170
54 மோடி அரசாங்கம் சீத்தாராம் யெச்சூரி கட்டுரைகள் 224 160
55 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழவேட்டியும்        
  அணிந்த மனிதர் ஜி.நாகராஜன் சிறுகதைகள் 150 135
56 ராமநாதன் பிரான்சிஸ் VI E மு.மருதவாணன் குழந்தை நாவல் 32 0
57 பொங்குமாங்கடல் அருணன் கட்டுரைகள் - இலக்கியம் 396 150
58 பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும் கருணா கட்டுரைகள் - உலக சினிமா 184 120
59 செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் சி.டி.குரியன் - ச.சுப்பாராவ் கட்டுரைகள் - பொருளாதாரம் 272 170
60 அமீர் ஹைதர் கான் - அயூப் மிர்சா - கி.ரமேஷ் வாழ்க்கை வரலாறு 192 120
61 வன புத்திரி ச.சுப்பாராவ் நாவல் - மறு வாசிப்பு 112 80
62 கல் சொல்லும் கதை**** கர்னல் கணேசன் தென் துருவ அனுபவம் 64 50
63 காலத்தின் குரல் அருணன், ச.தமிழ்ச்செல்வன் தமுஎகச வரலாறு 272 200
64 The Founders of CPI(M) N.Ramakrishnan வாழ்க்கை வரலாறு 405 500
        11830 8550


9 comments:

  1. புத்தகங்களை வீட்டிலேயே வைத்திருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், இடம் போதாவிட்டாலும் வீட்டில்தான் வைத்திருக்கிறேன்

      Delete
  2. நீங்க படித்த அனுபவங்களை படித்து பிரமித்தேன்.

    ReplyDelete
  3. ​தோழர், மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ஒருவ​ரை ​inspire ​செய்திருக்கி​றேன் என்றால் பரவாயில்​லை... நான் தினமும் இத்த​னை பக்கம் என்பதாக குறித்து ​வைப்பதில்​லை.புத்தகம் படிக்க ஆரம்பித்த நாள், முடித்த நாள் என்பதாகக் குறித்து ​வைத்து வருகி​றேன். ஒ​ரே சமயத்தில் 2-3 புத்தகங்கள் ஓடும். ஒன்று ​போரடிக்கும் ​போது ஒன்று என. என​வே ரிஜிஸ்ட​ரைப் பார்த்தால் ​தேதிகள் clash ஆவது ​போல் இருக்கும். நீங்கள் புத்தகம் எந்த வ​கை​யைச் சார்ந்தது என்றும் கூடுதலாகக் குறித்து ​வைக்கிறீர்கள் ​போலும். என் புத்தகங்கள் இரண்டும் பட்டியலில் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. முடிந்தால் வனபுத்திரி பற்றி இங்கு எழுதுங்க​ளேன்.

    ReplyDelete
  4. உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது தோழர். நாளைய பதிவு வன புத்திரி பற்றிதான். ஏற்கனவே எழுதி விட்டேன்.

    ReplyDelete
  5. Very inspirational Thozhar. All the best !

    ReplyDelete
  6. அன்பு தோழருக்கு வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை i m being a new reader its encouraged me thanks a lot

    ReplyDelete
  7. அன்பு தோழருக்கு வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை i m being a new reader its encouraged me thanks a lot

    ReplyDelete
  8. நிறைய தடவை யோசித்ததுண்டு. படித்த புத்தகங்களை என்ன செய்வது என்று. சில சமயம் யாருக்குக் கொடுப்பது என்று தெரியாமல் தூக்கி எறிந்ததும் உண்டு. இதில் குழந்தைகளுக்கு வாங்கிய புத்தகங்களும் அடக்கம். படித்து முடித்தவுடன், பிளாக்கிலேயே பாதி விலைக்கு விற்றுவிட்டால் இருவருக்கும் நல்லது.

    ReplyDelete