ரஜனிகாந்திற்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்ட செய்தியை படித்த போது அந்தக் காலத்தில் இந்திரா காந்தி அரசு ரிக்சாக்காரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான “பாரத்” விருதை எம்.ஜி.ஆருக்கு அளித்ததுதான் நினைவிற்கு வந்தது. சிறந்த நடிகர் விருதுக்கு “பாரத்” என்றும் சிறந்த நடிகை விருதுக்கு “ஊர்வசி” என்றும் பெயர் வைக்கப் பட்டிருந்த காலம் அது.
அந்த திரைப்படத்தை பார்த்த நிஜமான திரைப்பட ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆருக்கு
அந்த விருது கொடுக்கப்பட்டது எவ்வளவு பெரிய அபத்தம் என்பது தெரியும். அரசியல்
நோக்கர்களுக்கு திமுக வை உடைப்பதற்காக கொடுக்கப்பட்ட அரசியல் ஊக்கப் பரிசு அந்த
விருது என்பது புரியும்.
இப்போது ரஜனிகாந்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பத்ம விபூஷனுக்கும் அரசியல் தவிர
வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?
யாருமே கண்டுகொள்ளாத பாஜகவை சட்டமன்றத் தேர்தலில் கரை சேர்க்க
ரஜனிகாந்தாவது துடுப்பாக மாறுவாரா என்ற ஏக்கத்தில் விருது அளித்து தூண்டில்
போட்டுள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி வீட்டிற்கே வந்தும் கூட
வழுக்கிக் கொண்ட போன ரஜனியை இப்போதாவது சிக்க வைக்க முடியுமா என்று
முயற்சிக்கிறார்கள்.
தன்னுடைய புதிய படம் வெளியாகும் நேரத்தில் அப்போது பரபரப்பை உருவாக்க
மட்டுமே ரஜனி வாய் திறப்பார் என்று மோடிக்கு பொன்னார், தமிழிசை ஆகியோர்
சொல்லவில்லை போலும்!
இவருக்கு பதிலாக “தல” மற்றும் “தளபதி” ஆகியோருக்கு “பத்மஸ்ரீ” விருது
கொடுத்திருந்தால் ஒரு வேளை கொஞ்சமாவது பலன் கிட்டியிருக்குமோ?
திமுகவை உடைப்பதற்காக பாரத் பட்டம் கொடுக்கப்படவில்லை.திமுகவின் வற்புறுத்தலால் கொடுக்கப்பட்டது.திமுக உடைந்த பின்னர் நாங்கள்தான் பாரத் பட்டம் வாங்கி தந்தோம் என திமுகவினர் மேடையில் முழங்க,எம்ஜிஆர் பட்டத்தை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். ஆனால் விருது குழுவினர் யாருடைய பரிந்துரையின் பேரிலும் அது வழங்கப்படவில்லை என்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டு பிரச்சனையை முடித்து வைத்தனர்.
ReplyDeleteவிருது வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் திமுக வோடு முறைத்துக் கொண்டிருந்தார். எது எப்படியானாலும் நடிப்புத் திறமைக்கான விருது அல்ல என்பதைத்தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்
Deleteதல சிக்க மாட்டாருன்னு தோணுது! தளபதி வேணும்னா சிக்கலாம்! அரசியல்காரணங்களுக்காக விருது என்பது கேவலமான ஒன்று!
ReplyDeleteஅந்த சமயத்தில் தேர்வுக்குழுவில் சிவாஜிக்குக் கொடுப்பதற்குப்பதிலாக (பா வரிசைப் படங்கள்) ஒருவர் தவறுதலாக எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டார். அப்புறம் அதற்கு மாறாக, சிவாஜி பேரைச் சொன்னால் சிக்கல் வந்துவிடுமோ என்று பயந்து மற்றவர்களும் எம்.ஜி.ஆர் என்றே சொல்லிவிட்டனர் என்று ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.
ReplyDelete