“இந்திய ராணுவத்தின் இரு படைப்பிரிவுகள் புதுடெல்லியை நோக்கி 2012 ம் ஆண்டு
வந்தது உண்மைதான். பாதுகாப்பு அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினராக இருந்ததால்
இந்த உண்மையை நான் அறிவேன்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ்
திவாரி ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஏ.கே.ஆண்டணியும் இதை மறுத்துள்ளார்கள். மணீஷ்
திவாரிக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று முன்னாள் ராணுவ தளபதியும் இன்றைய மோடி
அரசின் அமைச்சருமான வி.கே.சிங் நக்கலடித்துள்ளார்.
வயது குறித்த சர்ச்சை,
காஷ்மீர் தேர்தல் அமைதியாக நடக்க கோடிக்கணக்கில் ராணுவம் செலவு செய்தது
என்று சொன்னது,
பதவி ஓய்வுக்கு முன்பாக பல முக்கியமான ஆவணங்களை எரித்தது,
“நாய்கள் மீது கல்லெறிந்தால் கூட பதில் சொல்ல வேண்டுமா?” என்பது உட்பட
ஏராளமான ஆணவப் பேச்சுக்களை உதிர்த்தது.
ஆகியவைதான் வி.கே.சிங் தன்னைப் பற்றி உருவாக்கியிருக்கிற சித்திரம்.
எனவே இந்த மனிதர் ஏன் தன்னிச்சையாக ராணுவப் பிரிவுகளை புதுடெல்லி நோக்கி
அழைத்திருக்க மாட்டார் என்ற சந்தேகம் இயல்பாகவே வருகிறது.
வெறும் வதந்தி என்று ஒதுக்கித் தள்ளாமல் விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்
கொணர வைக்க வேண்டிய பொறுப்பு மோடி அரசுக்கு உள்ளது.
தங்களை கையாலாகாத அரசு என்று மக்கள் சொல்லி விடுவார்களே என்று அஞ்சி
காங்கிரஸ் கட்சி உண்மைகளை மூடி மறைக்கக் கூடாது.
அந்த அச்சம் இனி புதிதாக வர வேண்டிய அவசியம் இல்லை.
அது ஒரு கையாலாகாத அரசு என்பது ஊரறிந்த விஷயம்தான்.
What is wrong - showing mussels, then only these polluted politicians having fear. indian express carried the article , shows the small march-fast ! movement all the high peoples rushed/ran to pm office and talked with him as negotiation.
ReplyDeleteஉங்களை உகாண்டாவுக்குத்தான் அனுப்பனும். சரி இவரை விட ஊழல் பேர்வழி யாரு?
Deleteஎன்ன இருந்தாலும் இருமுறை பிறந்தவர்!!. பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிக்கை போல.
ReplyDeleteபதவியை தக்க வைக்க செய்த ஏமாற்று வேலையை உச்ச நீதி மன்றம் அம்பலபடுத்தி அசிங்கபட்டவர்.
நம்ம நாட்டில் மட்டும் பதவிக்குத் தகுந்த மெச்சூரிட்டி இல்லாதவர்கள் பெரிய பதவிகளுக்கு வந்துவிடுகிறார்கள்? (இந்த சிங், கட்ஜூ, மனைவியைக் கொன்றதாகச் சந்தேக்கிக்கப்படும் பேர் மறந்துபோன கேரளா காங்கிரஸ் எம்பி போன்றவர்கள்)
ReplyDelete