இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளிவந்துள்ள அருமையான கட்டுரை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் மோடி அரசின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறார்.
கேள்வி கேட்காதே இந்தியா!
க.கனகராஜ்
கவலைப்படாதே இந்தியா, கவலைப்படாதே! இப்ப என்ன நடந்து விட்டது. வரி
போடுவது குற்றமாகாது. அதுவும் கலால்வரி. மத்திய அரசின் வரம்பிற்குட்பட்டது.
அதை எப்படி கேள்வி கேட்க முடியும்.ஒன்றரை ஆண்டில் எட்டு முறையா?என் கேள்வி
இது. எத்தனை நாளைக்கொரு முறை வரி போட வேண்டுமென சட்டம் சொல்கிறதா? ஒரு
நாளைக்கொருமுறை வரி போடக்கூட சட்டத்தில் தடையில்லை தெரியுமா? நாங்கள்
சட்டத்தை மீறவில்லை.அதுசரி ஒன்றரை ஆண்டில் 100 சதவீதத்திற்கு அதிகமாகவா வரி
உயர்த்து வது? என்ன இந்தியா. இப்படிக் கேட்கிறாய். பொருள் விலைக்கு
அதிகமாக வரி போடக் கூடாதென எந்தச் சட்டத்தில் இருக்கிறது. நாங்கள்
ஆட்சிக்கு வரும்போது பெட் ரோலுக்கு கலால் வரி ரூ.9.48. அது மிகமிகக்
குறைவு. இரண்டு மடங்காக்கினால் ரூ.18.96 வரும். அது திட்டமிட்டுச்
செய்ததாய் தோன் றும். ரூ.20.91 என்பது அப்படி தோன்றாது. டீசலும்
அப்படித்தான். ரூ.3.56 மிக மிக குறைவாய் இருந்தது. இப்போது 15.83. இது
ஐந்து மடங்கிற்கு குறைவு. அலட்டிக் கொள்ளாதே இந்தியா உடம்பிற்கு ஆகாது.ஆமா!
கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் விலை, டீசல் விலை
குறையுமென்றீர்களே. ஆட்சிக்கு வரும் போதுகச்சா எண்ணெய் விலை 106.85 டாலர்.
இப்போது 29.85 டாலர். அதாவது 72 சதவீதம் குறைந்திருக்க வேண்டும்.
அதாவது3ல் இரண்டு பங்கு குறைந்திருக்க வேண்டும். இப்போது பெட்ரோல்
லிட்டருக்கு ரூ.29.85க்கும், டீசல் லிட்டர் ரூ.15.04க்கும் தானே விற்க
வேண்டும். பதறாதே இந்தியா! விவரம் புரியாமல் பேசுகிறாய். நாங்கள் பெட்ரோல்
டீசல் விலையை குறைத்துக் கொண்டேதான் வருகிறோம். ஆனால், வரியை
குறைப்போமென்றோ, அதிகரிக்கமாட்டோமென்றோ எப்போதாவது சொன்னோமா? வார்த்தை தவற
நிர்ப்பந்திக்காதே இந்தியா.எண்ணெய் விற்பனைக் கம்பெனிகள் நட்டத்தில்
இயங்குகின்றன. அதனால்தான் விலையேற்றம் என்றீர்கள். இப்போது அவை
லாபத்தில்தானே இயங்குகின்றன. என்ன இந்தியா புரியாமல் பேசுகிறாய்.
நட்டத்தில் இருந்து மீண்டு வர விலையை உயர்த்தினோம்.
இப்போது லாபத்தை
அதிகமாக்க விலையை உயர்த்துகிறோம். லாபத்தில் வந்தால் விலை குறைப்போம்
என்று எப்போதேனும் வாக்கு தந்தோமா?இத்தனை பணத்தையும் என்ன செய்யப்
போகிறீர்கள். குழந்தை, பெண்களுக்கு ஒதுக்கீட்டை குறைத்தீர்கள். கிராமப்புற
வேலை ஒதுக்கீட்டை குறைத்தீர்கள். உணவு மானியத்தையும் குறைத்துவிட்டீர்கள்.
இப்படி பேசாதே இந்தியா. சொத்துவரியை ரத்து செய்து விட்டோம். அதுமட்டும்
1008 கோடி அதை எப்படி ஈடுகட்டுவது. பெருநிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியை
5 சதம் குறைக்க பட்ஜெட்டிலே அறிவித்துவிட்டோம். அந்த இழப்பை எப்படி
ஈடுகட்டுவது. அதுபோக வழக்கமாக பெரு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்கும்
தொகை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறத
எவ்வளவு பெரிய தொகை
அதையெல்லாம் எப்படி ஈடுகட்டுவது. புரியாமல் பேசாதே இந்தியா!நல்லகாலம்
வருமென்றீர்களே? உண்மைதான். யாருக்கென்று எப்போதாவது கேட்டாயா இந்தியா?
யாருக்கு நல்ல காலமென்று உனக்கு நல்ல காலமென்று, நினைத் துக் கொண்டால்
அதற்கு நான் பொறுப்பா?ஏழைகளைப் பற்றியெல்லாம் பேசினீர்களே! உன்னோடு பெரிய
ரோதனை இந்தியா? உணவென்றால் ஒருவருக்கு சப்பாத்தி. இன்னொருவருக்கு சோறு.
ஏழையென்றால் நீ மக்களென்று பொருள் கொள்வாய். நான் பெரு முதலாளி என்று
பொருள் கொள்கிறேன். ஏழையென்றால் யார் என்று எப்போதாவது கேட்டாயா? நாங்கள்
ஏழைகளுக்குத்தான் சேவை செய்கிறோம். யார் ஏழை என்பதில்தான் நமக்குள்ள
வேறுபாடு.என்ன இப்படி பேசுகிறீர்கள். கேஸ் விலையை உயர்த்தியபோது
(13/09/2012) முக்தார் அப்பாஸ் நக்வி “பெட்ரோல் மாபியாவின் சதி என்றாரே!
எல்லா விலையும் ஏறு மென்றார். பொருளாதாரம் சீர்குலையும் என்றார். சிதம்பரம்
ரூபாய் மதிப்பு வீழ்ந்ததால் உயர்வென்றதற்கு, அதற்கும் காரணம் காங் கிரஸ்
கடைபிடித்த கொள்கைதான் என்றார். அதையெல்லாம் மறந்து விட்டீர்களா?
துரதிஷ்டவசம் இந்தியா அதையெல்லாம் ஏன் நினைவில் வைத்திருக்கிறாய். நாங்களே
அதை நினைவில் வைப்பதில்லை.இது நியாயமில்லை கனவானே. அப்போது பெட்ரோலியப்
பொருள் விலை உயர்வை பிரகாஷ் ஜாவேத்கர், ஒளவுரங்கசீப் முஸ்லிம் அல்லாதவர்கள்
மீது போடப்பட்ட “ஜாஸியா” வரியைப் போன்றதென்று பேசினாரே
நினைவில்லையா?சரியாகச் சொன்னாய் இந்தியா! சபாஷ். ஒரு முஸ்லிம் ஜாஸியா
வரிபோட்டால் சரி. நாம் போட்டால் தவறா? முஸ்லிம் மன்னன் போட்டாலோ, பாஜக
அல்லாத அரசாங்கம் போட்டாலோதானே அது ஜாஸியா வரி. நாம் போட்டால் அது ஜாலியான
வரி. சந் தோஷமாய் இரு இந்தியா? உலக வங்கியோ வர்த்தக அமைப்போ, பெரு
முதலாளிகளோ நிர்ப்பந்திக்கும் வரை தாய்ப்பாலுக்கு வரிபோட மாட்டோம் என்பதை
உறுதியாகச் சொல்கிறேன் இந்தியா. மகிழ்ச்சியாய் இரு.
No comments:
Post a Comment