Wednesday, January 20, 2016

தினமலர் போல தினமணியும் கேவலமாய்




கொஞ்சம் கூட மனசாட்சியோ, அறமோ இல்லாமல் செயல்படக் கூடிய பத்திரிக்கை தின மலர் என்றால் அதற்கு நானும் கொஞ்சமும் சளைத்தது அல்ல என்று தின மணியும் நிரூபித்துள்ளது.

தின மணியின் தலையங்கத்தை ஒரு முக நூல் இணைப்பின் மூலம் படித்தேன். ரோஹித் வெமுலா தற்கொலையை அரசியலாக்குவதாக வெறுப்பை உமிழ்ந்துள்ள அந்த தலையங்கம், ரோஹித் தற்கொலைக்கு காரணமானவர்களை நியாயப்படுத்தவும் செய்துள்ளது.

ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய காவி மாணவர் அமைப்பு, அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்ட பாவி பண்டாரு, மெயில் மேல் மெயில் அனுப்பி ஐந்து மாணவர்களை துரத்த வைத்த ஸ்மிர்தி இராணி அம்மையார், அதற்கு அடி பணிந்த துணை வேந்தர் என்று அனைவரும் நியாயவான்கள் என்றும் அவர்களை குறை சொல்வது பாவம் என்றும் அந்த தலையங்கம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் மோடி கூட்டத்திற்கு ஜால்ரா தட்டியிருக்கிறது.

போகிற போக்கில் சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்ததில் தவறென்ன உள்ளது என்றும் கேட்கிறது.

கனவுகள் நிரம்பிய ஒரு மாணவனின் அகால மரணத்திற்கான அராஜகப் பேர்வழிகளை விட இந்த தலையங்கம் இன்னும் அராஜகம். 

விஜயகாந்த் செய்கை அநாகரீகமாக இருந்தாலும் இவர்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள்தான். 

8 comments:

  1. நெஞ்சு பொறுக்குதிலையே ..
    என்ன ஒரு அநியாயம், ஒவ்வொரு செய்தியையும் படிக்கும் போது நெஞ்சு பதறுகின்றது தோழரே.

    ReplyDelete
  2. விஜயகாந்த் do it correct. for dinamalam and dinakunsu.

    M. Syed
    Dubai

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தின மணி கக்கிய விஷத்தை இங்கே வந்து வாந்தியெடுக்க வேண்டாம்

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஜாதி ஆதிக்க வெறி உங்களை இவ்வளவு அநாகரீகமாக எழுத வைத்துள்ளது

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete