வரும் செப்டம்பர் முதல் நாள் எங்கள் எல்.ஐ.சி யின் உதய தினம்.
அதற்காக ஒரு சுற்றறிக்கை தயார் செய்து கொண்டிருந்தபோது
எழுதப்பட்ட வாசகங்கள் கீழே உள்ளது.
அப்போதுதான் வேறு பல முரண்பாடுகளும் இந்தியாவில் நிலவிக்
கொண்டிருப்பதை உணர முடிந்தது.
பல தமிழக நிறுவனங்களில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்
திமுக, அதிமுக சங்கங்களுக்கு வாக்களிக்கும் தொழிலாளர்கள்
தங்களின் கூட்டுறவு சொசைட்டி, கூட்டுறவு வங்கித் தேர்தலில்
மட்டும் சி.ஐ.டி.யு வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்யும் பையனுக்கு பெண் கொடுக்க
ஆசைப்படுவார்கள். ஆனால் வெளிநாட்டுக்காரனுக்கு
பெண் தர மாட்டார்கள்.
தியேட்டர், தனியார் வங்கிகளில் வரிசைகளில் அமைதியாக
நிற்பார்கள். அரசு வங்கிகள், அரசு அலுவலகங்களில் சத்தம்
போட்டு தங்களின் உரிமைகளை நிலை நாட்டுவார்கள்.
தொலைக்காட்சி தொடர்களில் வரும் பெண்கள் கண்ணீர்
வடிக்கும்போது சேர்ந்து அழுவார்கள். ஆனால் நிஜத்தில்
அப்படி சிரமப்படுவதை பார்க்கும்போது கண்டும் காணாமல்
ஒதுங்கி விடுவார்கள்.
இந்த காலப் பசங்க எப்ப பாரு பேஸ்புக், நெட்டுனு பொழுதை
வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று திட்டிக் கொண்டே
புதிதாக என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று
யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
என்னை மாதிரி
பின் குறிப்பு : இது பெரும்பாலானவர்களை குறிப்பது. ஆகவே
நான் அப்படியெல்லாம் இல்லை என்ற பின்னூட்டங்களை
தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதற்காக ஒரு சுற்றறிக்கை தயார் செய்து கொண்டிருந்தபோது
எழுதப்பட்ட வாசகங்கள் கீழே உள்ளது.
ஆடை
அணிகலன்கள் உள்ளிட்டு எண்ணற்ற நுகர்வோர் பொருட்களில் அன்னிய தயாரிப்புக்களை
வாங்குவதில் மோகம் கொண்ட இந்திய மக்கள், இன்சூரன்ஸ் என்று வரும்போது மட்டும்
அன்னியக் கம்பெனிகளை ஒதுக்கி வைத்து எல்.ஐ.சி யை நாடுகிறார்கள் என்றால் அது
எல்.ஐ.சி யின் அனைத்து பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் ஆகியோரின்
அர்ப்பணிப்பு மிக்க சேவையால்தான் என்பது வெள்ளிடை மலை.
அப்போதுதான் வேறு பல முரண்பாடுகளும் இந்தியாவில் நிலவிக்
கொண்டிருப்பதை உணர முடிந்தது.
பல தமிழக நிறுவனங்களில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்
திமுக, அதிமுக சங்கங்களுக்கு வாக்களிக்கும் தொழிலாளர்கள்
தங்களின் கூட்டுறவு சொசைட்டி, கூட்டுறவு வங்கித் தேர்தலில்
மட்டும் சி.ஐ.டி.யு வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்யும் பையனுக்கு பெண் கொடுக்க
ஆசைப்படுவார்கள். ஆனால் வெளிநாட்டுக்காரனுக்கு
பெண் தர மாட்டார்கள்.
தியேட்டர், தனியார் வங்கிகளில் வரிசைகளில் அமைதியாக
நிற்பார்கள். அரசு வங்கிகள், அரசு அலுவலகங்களில் சத்தம்
போட்டு தங்களின் உரிமைகளை நிலை நாட்டுவார்கள்.
தொலைக்காட்சி தொடர்களில் வரும் பெண்கள் கண்ணீர்
வடிக்கும்போது சேர்ந்து அழுவார்கள். ஆனால் நிஜத்தில்
அப்படி சிரமப்படுவதை பார்க்கும்போது கண்டும் காணாமல்
ஒதுங்கி விடுவார்கள்.
இந்த காலப் பசங்க எப்ப பாரு பேஸ்புக், நெட்டுனு பொழுதை
வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று திட்டிக் கொண்டே
புதிதாக என்ன ஸ்டேட்டஸ் போடலாம் என்று
யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
என்னை மாதிரி
பின் குறிப்பு : இது பெரும்பாலானவர்களை குறிப்பது. ஆகவே
நான் அப்படியெல்லாம் இல்லை என்ற பின்னூட்டங்களை
தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
// இன்சூரன்ஸ் என்று வரும்போது மட்டும் அன்னியக் கம்பெனிகளை ஒதுக்கி வைத்து எல்.ஐ.சி யை நாடுகிறார்கள் என்றால் அது எல்.ஐ.சி யின் அனைத்து பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையால்தான் என்பது வெள்ளிடை மலை.//
ReplyDeleteஎல்.ஐ.சி யின் டெர்ம் இன்சூரன்ஸ் பிரிமியம் ஏன் மற்ற நிறுவனங்களின் தொகையைவிட மிக அதிகமாக இருக்கிறது?
சேவை உணர்வு அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை ஊழியர்களிடம் கொண்டு வந்ததில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்திற்கு பெரும் பங்கு உண்டென்று சொன்னால் அது மிகையல்ல.
ReplyDeletenijam!
ReplyDeleteஉண்மை.
ReplyDelete