Friday, August 23, 2013

வேணும், வேணும், அமிதாப் பச்சனுக்கு நல்லா வேணும்.....

இன்றைய முக்கியமான தலைப்புச் செய்திகளில் ஒன்று
அமிதாப்பச்சனின் குரலை நரேந்திர மோடியின் விளம்பரத்திற்காக
பயன்படுத்திய மோசடி வேலைதான்.



அசலும் நகலும் சேர்த்து அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள 
வீடியோவின் இணைப்பு இங்கே.

அமிதாப்பச்சனும் அவர் ரசிகர்களும் பொங்கி எழுந்து விட்டார்கள்.
ஒரு உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் கலைஞரைப் பார்த்து

" பச்சை, பச்சை, பச்சை துரோகம்" என்று  

மருத்துவர் ஐயா சொன்னாரல்லவா?

அது போல அமிதாப்பச்சனும் 

"போலி, போலி, போலி"

என்று கர்ஜித்துள்ளார்.

ஆனால் எனக்கு என்னமோ அமிதாப்பச்சன் மீது அனுதாபமே
வரவில்லை.

திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பணம் வருகிறது,
விளம்பரங்களில்  நடிப்பதன் மூலம் பணம் வருகிறது,
க்ரோர்பதி நிகழ்ச்சியில் உண்மையான கோடீஸ்வரர் அவர்தான்.
அவர் மனைவியும் அந்த காலத்தில் சினிமாவில் நடித்தவர்.
இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்.
மகனும் மருமகளும் திரைப்படம், விளம்பரம் என்று 
கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இவ்வளவு இருந்தும் குஜராத் மாநில பிராண்ட் அம்பாசிடர்
பணியை மோடி கொடுத்ததும்
காசு,பணம், துட்டு, மணி, மணி 
என்று ஓடி விட்டார்.

அதனுடைய விளைவு 

இன்று தவிக்கிறார்.

சினிமாக்காரர்தானே படங்களில் யாராவது பின்னணி
பேசுவது பழக்கம்தானே, மாறாக முன்னர் பேசிய பின்னணிக்கு
படத்தை  மட்டும் மாற்றி விட்டார்கள்.

ஆனால் மோடியின் இந்த மோசடி இப்போது அம்பலமானது
ஒரு வகையில் நல்லது.

பிரதமராக வருவதற்கே இவ்வளவு கேடி வேலைகள் செய்யும்
நரேந்திர மோடி, பிரதமரானால் எவ்வளவு கேடி வேலையெல்லாம்
செய்து காங்கிரஸ்காரர்களையே தூக்கி சாப்பிட்டு விட மாட்டாரா
என மனசாட்சியுள்ள நீங்கள் எல்லாம் யோசிக்க மாட்டீர்களா என்ன?

காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாவிற்கும் வேறு மாற்று
கிடையாதா என்று சிந்திக்க மாட்டீர்களா என்ன? 

3 comments:

  1. மாற்று யாரென்று நீங்கள்தான் சொல்லக் கூடாதா?..................

    ReplyDelete
  2. தோழரே கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே மாற்றாக இருக்க முடியும். தோழர் ஜோதி பாசு போன்ற சிறந்த தலைவர்களை தந்த கட்சி அது மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  3. மனசாட்சியுள்ள நீங்கள் எல்லாம் யோசிக்க மாட்டீர்களா என்ன?
    >>
    யோசிக்குறதா?! நம்மாளுங்களா?! நடக்குற விசயத்தை பேசுங்க சார்!!

    ReplyDelete