Wednesday, August 28, 2013

மீனை ஒழுங்காக பொறிக்கத் தெரியாதா? ஒரு நீதிபதியின் அராஜகம்

கீழே தரப்பட்டுள்ள இடை நீக்க ஆணையை பாருங்கள்.

வள்ளியூரில் உள்ள நீதிபதி, தனக்கு கீழே உள்ள ஊழியர்
தனது சொந்த வேலையை செய்ய மறுத்ததால், மீனை
ஒழுங்காக சுத்தம் செய்து பொறிக்காததால் இடை நீக்கம்
செய்துள்ளார்.


என்ன ஒரு அராஜகம் இது.

நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்றத்தில் வேலை செய்ய 
வேண்டியவர்களா ? இல்லை நீதிபதியின் வீட்டில்
வேலை செய்ய வேண்டியவர்களா?

மீனை சரியாக பொறிக்கவில்லை என்று அதை 
அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் காண்பித்து
அதற்காக இடை நீக்கம் செய்வாராம்.

இவர் வழங்கும் தீர்ப்புக்கள் எந்த லட்சணத்தில்
இருக்கும் என்பது அந்த நீதி தேவதைக்கே 
வெளிச்சம்...

எத்தனையோ நீதிபதிகள் மீது இப்போது 
முறைகேடுகளுக்காக நடவடிக்கைகள் பாய்கிறது.

இவரும் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டியவர்தான். அப்படி நடவடிக்கை எடுத்தால்
அதற்காகவும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை
புறக்கணிப்பார்களா?

பின் குறிப்பு : இந்த ஆணையை நான் இன்றுதான்
முக நூலில் பார்த்தேன். அந்த அப்பாவி ஊழியரின்
இன்றைய நிலை என்ன என்பதை அறிந்தவர்கள்
யாராவது சொல்லுங்களேன்.

6 comments:

  1. இந்த மாதிரியான கூத்துகள்லாம் இந்தியாவுல மட்டும்தான் நடக்கும்

    ReplyDelete
  2. நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்கள் வீடுகளில் வேலை செய்ய அரசு அனுமதிக்கப் பட்ட பணியாளர்கள் உண்டு என்று நினைக்கிறேன். ஆனாலும் சஸ்பென்ட் செய்தது ஓவர்தான். என்ன செய்வது சில உயர் அதிகாரிகள் தங்க கீழ் பணியாற்றும் அலுவலர்களைக் கூட வேலைக் காரர்கள் போல் நடத்துவதும் பேசுவதும் இருக்கத்தான் செய்கிறது.
    அதிகாரம் இருப்பதால் மனிதாபிமானம் பறந்து விடுகிறது.

    ReplyDelete
  3. This was reported in the savukku web site a long time ago. It was also reported later in the same site, that this lady judge has been transferred from valliyoor, not related to these charges..Its time to stop employing people in the houses of the top brass of police (called as orderly) and in the judiciary...

    ReplyDelete
  4. பூந்தமல்லியில் ஒரு நீதிபதி சட்டையை ஒழுங்கா தேய்த்து (Ironing)தரவில்லை என memo கொடுத்தார்

    மேற்கண்ட மா. வேல்முருகன், உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் தற்போது பணியில் சேர்ந்துள்ளார்

    ReplyDelete
  5. முழு கட்டுரையை இங்கு பார்க்கவும். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1797:2013-04-16-17-02-12&catid=10:2010-10-16-14-42-56&Itemid=3

    ReplyDelete
  6. மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் !
    ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
    ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரு!''
    இது என் நேற்றைய பதிவு ,,,அதிகாரிகள் சிலர் இப்படித்தான் நக்கலுடன் ,மனிதாபிமானமின்றி நடந்து கொள்கிறார்கள்>>>http://jokkaali.blogspot.com/2013/08/blog-post_28.html

    ReplyDelete