ஆரஞ்சுப் பழமாய்
அந்திமச் சூரியன்,
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்,
பொன்னில் செய்த
ஊசிகள் போல,
மெல்லிய தூறல்கள்
மேலே விழ,
நனைந்து விடும்
அச்சத்தில் சிலர்
ஒதுங்கி நிற்க,
துடைத்தது போன்ற
தூய்மைச் சாலையில்
தனிமையில்
இனிமையாய்
இன்றைய
வீடு திரும்பல்.
இனியாவது முக நூலில் பதிவுகள் இடுவதை நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போடாமல் எங்கிருந்தாலும் பதிவிடுவதை தொடரப் பாருங்கள் தோழரே
ReplyDelete