தலைவா
திரைப்படப் பிரச்சினை பற்றி இதுநாள்
வரை எதுவும் எழுதாமல் இருந்தேன்.
எந்த ஒரு கலை
வடிவத்தையும் மக்கள் பார்க்கக் கூடாது என்று தடை செய்வது சரியல்ல. அதிலே முரண்பாடு
இருந்தால் அதன் மீது விமர்சனம் செய்வதுதான் சரியாக இருக்கும் என்ற என்
நிலைப்பாட்டில் எவ்வித மாறுதலும் இல்லை.
தலைவா
படத்தின் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதே இதுநாள் வரை புரியாமல் இருந்தது. எந்த
ஒரு குறிப்பிட்ட அமைப்பும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. வெறும் மொட்டைக்
கடிதத்திற்கு இவ்வளவு சக்தியா என்பதுதான் புதிராக இருந்தது.
இதோ இப்போது
விஜய் ரசிகர் மன்ற தலைமை அமைப்பு வெளியிட்டுள்ள பிரசுரத்தின் மூலம் அரசு ஏன்
அசைந்து கொடுக்கவில்லை என்பதை யூகிக்க முடிகிறது.
வருங்கால,
எதிர்கால, நாளைய ( முதல்வரே – இந்த வார்த்தை சொல்லப்படவில்லையென்றாலும் அதுதான்
என்பதை நன்றாக நாம் உணர முடியும்) போன்ற
வார்த்தைகளை பேனர்களில் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறவர்கள் பேனரில்
பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிற வாசகங்கள் முதல்வரே என்று அழைப்பதை விட இன்னும்
கூடுதலான ஜால்ரா வாசகங்கள். விஜய் இன்னும் ஒரு கடவுள் என்று சொல்லவில்லை.
அவ்வளவுதான். அந்த அளவிற்கு தனி நபர் துதி மேலோங்கியுள்ளது.
அர்ஜூன்
நடித்த ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி சூப்பர் ஸ்டார் ஷில்பா குமாராக வருவார்.
அவரது ரசிகர்களில் ஒருவர் வருங்கால முதல்வர் ஷில்பா குமார் வாழ்க என்று கோஷம்
போடுவார். அன்றி இரவு எல்லா அரசியல்வாதிகளும் அவருக்கு போன் செய்து “ ட்டை
புல்டோஸர் வைச்சு இடிச்சுடுவோம்“, “மாறுகால் மாறுகை வாங்குவோம்” “ஆசிட்டை முகத்தில
வீசிடுவோம்” “ குடும்பத்தையே அழிச்சிடுவோம்” என்றெல்லாம் மிரட்டி தூக்கத்தை
மட்டுமல்ல, அரசியல் ஆசையையும் கலைத்து விடுவார்கள். இந்த காட்சிக்குப் பிறகு அந்த
திரைப்படமே படு மொக்கையாக இருக்கும் என்பது வேறு விஷயம்.
திரைப்படம்
என்றால் மிரட்டி விடலாம், முதல்வர் ஆசையைக் கலைத்து விடலாம்.
ஆனால் நிஜ
வாழ்வில் அப்படி நேரடியாக மிரட்ட முடியாதல்லவா?
படத்தை
வெளியிட விடாமல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தடுத்து விட்டால்?
இப்போது
அதுதான் நடந்துள்ளது.
திரையில்
வீரம் பேசும் விஜய் போன்றவர்களால் நிஜத்தில் ஏன் தனக்கு இழைக்கப்படும்
அக்கிரமத்தை தட்டிக் கேட்க முடியவில்லை?
தனக்கு நிகழும் அராஜகத்தையே எதிர் கொள்ள முடியாதவர்களால் மக்கள் பிரச்சினைக்காக
என்ன செய்ய முடியும்? அப்படி எதுவும் செய்ய முடியாதவர்கள் முதல்வர் ஆசையையாவது
உருவாக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட
தைரியம் இல்லாதவர்களை மக்கள் ஷில்பாகுமார் கவுண்டமணி போல வெறும் காமெடியன்களாகவே
பார்ப்பார்கள்.
பின் குறிப்பு
: அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியோடு வலம் வந்த அழகிரிக்களே இன்று அடங்கிப் போய்விட்ட
நிலையில் திரைத் தளபதிகள் மட்டும் என்ன செய்ய முடியும்?
// அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியோடு வலம் வந்த அழகிரிக்களே இன்று அடங்கிப் போய்விட்ட நிலையில் திரைத் தளபதிகள் மட்டும் என்ன செய்ய முடியும்?//
ReplyDeleteநச் நச்
ரொம்ப சரிய சொனீங்க தளபதி கொள்லி கட்டையால தலையசொரிச்சுகிட்டாரு
ReplyDeleteவிஜயின் மைண்ட் வாய்ஸ் : ஏனுங்கண்ணா படத்துல பாகிஸ்தான் தீவிரவதிகள பந்தாடியவரை நிஜத்துல அவதூறு வழக்கு போட்டு ஊர் ஊரா பந்தாடியதை பார்த்துமா என்னை வாய்ஸ் கொடுக்க சொல்றிங்க ! ஆனாலும் உங்களது போங்கு ஆட்டம்னா !
ReplyDelete