ஊரிலிருந்து அக்காவும் அவரின் இரு மகன்களும் வந்திருந்தார்கள்.
" மாமா சும்மா பேஸ் புக்கில ஸ்டேட்டஸ் போட்டு போட்டோ போட்டா
நீங்கதான் சமைச்சீங்கன்னு நம்ப மாட்டோம். எங்க கண் முன்னாடி
சமைச்சுக்காட்டுங்க" என்றான் அக்காவின் பெரிய பையன்.
நக்கீரன் தருமியைப் பார்த்தது போல ஒரு பார்வை இருந்தது. ஏதோ
மண்டபத்தில் யாரோ சமைத்ததையா நான் இதற்கு முன்பாக படம்
பிடித்து போட்டிருந்தேன்? இப்படி ஒரு சவாலா?
என் சமையல் திறமையை மட்டுமல்ல நேர்மையையும் மீண்டும்
நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயம்.
சட்டம் என்று கமலஹாசன் படம் பார்த்துள்ளீர்களா? அதிலே
கமலஹாசனும் மாதவியும் ஒரு ரெஸ்டாரண்டில் ஊடல் முடிந்து
டூயட் பாடத் தயாராகும்போது அந்த ஹோட்டல் வெயிட்டர் வந்து
" எப்படியும் நீங்க பாட்டு பாடப் போறீங்க, அதை அந்த செடி
பக்கத்துல போய் பாடுங்க, அது சரியாவே வளரல, பாட்டு கேட்டா
தாவரமெல்லாம் வளரும்னு படிச்சேன்" என்பார்.
அது போல என் மனைவியும் எப்படியும் ஏதோ சமைக்கப்
போறீங்க. கொஞ்சம் உருப்படியா செஞ்சா, காலைல டிபன்
செய்யற வேலையாவது எனக்கு மிஞ்சும் என்றார்.
ஆகவே அதற்கும் ஏற்றார்போல இன்றைய பணி தொடங்கியது.
முதலில் கறிகாய் நறுக்கும் பணி.
அதையும் நான், நானேதான் முழுமையாக செய்தேன்.
வெங்காயம், தக்காளி, காரட், பொடிப்பொடியாக நறுக்கி
வைத்துக் கொண்டேன். இரண்டு உருளைக் கிழங்குகளையும்
தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டேன்.
காலிஃபளவர் முதலில் நறுக்கி உப்பு போட்ட சுடுதண்ணீரில்
கொஞ்சம் ஊற வைத்துக்கொண்டேன்.
உருளைக் கிழங்கையும் காரட்டையும் வேக வைத்துக் கொண்டேன்.
இரண்டு பாக்கெட் பிரெட் ( ஆறு பேருக்கான டிபனல்லவா!) டை
எடுத்து நான்கு துண்டுகளாக வெட்டி வைத்து அதை எண்ணையில்
வதக்கி தனியாக வைத்துக் கொண்டேன்.
பிறகு ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயத்தை
முதலில் வதக்கி, பிறகு காலிஃப்ளவர், பிறகு தக்காளி, அதன் பின்பு
வேக வைத்த உருளை, காரெட்டைப் போட்டு வதக்கி இதோடு
சிறிது மிளகாய் பொடி ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து
மிளகாய்பொடி வாசனை மறையும் வதக்கிக் கொண்டேன்.
கொஞ்சம் கரம் மசாலா பொடியும் தூவிக் கொண்டேன்.
இந்தக் கலவையோடு ஏற்கனவே தயாராக வைத்துள்ள பிரெட்
துண்டங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக
கலந்த பின்பு சாப்பிடக் கொடுத்தேன்.
ஐயோ முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே என்று
கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டேன்.
என்ன சிக்கலோ, வேற என்ன டிபன் உடனடியாக செய்யலாம்
என்ற சிந்தனையில் என் மனைவி இறங்க, அதற்கெல்லாம்
அவசியம் இல்லை என்று தட்டை வாங்கிய நான் செய்தது
என்ன தெரியுமா?
இதோ போட்டோ எடுத்தாச்சு...
எப்படி உள்ளது நானே யோசித்து தயார் செய்த புது உணவு.
ஆகவே ஆறு பேருக்கு காலை உணவளித்த நானே
இதற்கு பெயர் சூட்டி விட்டேன்.
மல்டி வெஜிடபிள் பிரெட் டிலைட்.
குடமிளகாய், பச்சைப்பட்டாணி சேர்த்தால் இன்னும் நன்றாக
இருக்கும்.
எப்படி இருந்தது என்ற கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது.
நிச்சயமாக என் அக்கா பையன் முகநூலில் பின்னூட்டம் போடுவான்.
அதை இங்கே பிறகு பதிவு செய்து விடுகிறேன்.
நீங்களும் முயற்சி செய்யலாம். ஆனால் எனக்கு ராயல்டி
கொடுத்து விட வேண்டும்.

மல்டி வெஜிடபிள் பிரெட் டிலைட்டின் படத்தை பார்க்கவே நல்லாக உள்ளது. சுவையாக தான் செய்திருப்பீர்கள்.
ReplyDeleteசட்டம் என்ற கமலஹாசன் படம் பார்த்ததில்லை,ஆனா நீங்க சொன்னது உங்களுக்கு நடந்தது சுவரஸ்சியமாயிருந்திச்சு.
ஆஹா, படிக்கறப்பவே நாக்கில தண்ணி ஊறுது!
ReplyDeleteComments Received in Face book
ReplyDeletePadma Pradeepa Lalith Kumar mama is eagerly waiting for ur feedback.... plz put into comments
Padma Pradeepa Mama Swaminathan Raman ivalavu periya platela ithunundu pota eppadi?? Apparam little poor presentation too
Annapurna Suriyanarayanan Sir hats off to ur culinary talent. Awe inspiring. Do continue and bring out the chef in u needless to say for a toast of ur feast
Raman Govindan good
Padmavathy Gajendran thozhar kallukureenga
Lalith Kumar Like Manni said, Naan en Mama va en Vittukudukkaporen?? But the best part was Mama didn't allow any of us to help Him even with chopping vegetables or serving it! It was a sheer one man show which resulted in this delicious stuff!!! Filled our stomach and hearts too...
என்னை உசுபேத்த வேண்டாம் என்று நீங்களே சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சமையலா? ஆனாலும் புது ரெசிபி உருவாக்கி தந்தமைக்கு ஹாட்ஸ் half
ReplyDeleteஆஹா! பிள்ளைகளுக்கு புது வித டிஃபன் செய்ய ரெசிபி தயார். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான சமையல்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!