நேற்றைய பத்திரிக்கை விளம்பரங்களில் தமிழக முதல்வர்
சென்னை போர் வீரர் நினைவகத்தில் மலர் வளையம்
வைத்து அஞ்சலி செலுத்துவார் என்று படித்த போது
கொஞ்சம் குழம்பினேன்.
சென்னை போர் வீரர் நினைவகத்திற்கு உள்ளே சென்றது
கிடையாது எனினும் வெளியிலிருந்து பார்த்துள்ளேன்.
முதலாவது உலகப் போரில் உயிர் நீத்த பிரிட்டிஷ் ராணுவ
வீரர்களின் நினைவகம் என்றல்லவா இருக்கும். இதற்கு
ஏன் செல்கிறார் என்று குழப்பம் வந்தது.
பிறகு விபரங்களை இணையத்தில் தேடியபோதுதான்
அந்த நினைவகத்தை முதலாம் உலகப் போர்,
இரண்டாம் உலகப் போர், சீனப் போர், பாகிஸ்தான்
போர்கள் என எல்லா போர்களிலும் இறந்த வீரர்களுக்கான
நினைவகமாக மாற்றி விட்டனர் என்பது தெரிய வந்தது.
தெளிவு கிடைத்தது.
புதிது புதிகாக நினைவகங்கள் அமைத்துக் கொண்டே
போவதை விட, அப்படி அமைத்து அவற்றை பராமரிக்காமல்
பாழாக்குவதை விட இது மேல் அல்லவா!
வணக்கம்
ReplyDeleteதகவல் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteதகவல் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தகவலுக்கு நன்றி.புதிது புதிகாக நினைவகங்கள் அமைக்காம பொது நினைவகமாக மாற்றி விட்டது பாரட்டுக்குரியது.
ReplyDeleteதமிழகத்தில் ஏற்கெனவே உள்ள பெருந் தொகையான சிலைகளை குறைப்பதற்கும் ஏதாவது வழி பார்க்க வேண்டும்.
இது நந்தம்பாக்கத்தில் உள்ள போர் வீரர் நினைவிடமா ?!
ReplyDeleteஅறியாத தகவல். பாராட்டுக்குரியதும் கூட.
ReplyDeleteதெரிந்த இடம் ஆனால் தெரியாத தகவல் . தகவலுக்கு நன்றி .
ReplyDelete