Saturday, August 17, 2013

உங்கள் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சவால் - தமிழறிவிற்கும்தான்

ஒரு நண்பர் அனுப்பிய மின்னஞ்சல் இது.

முதல் படத்தைப் பார்க்கவும்


இந்தப்படம் ஒரு பழமொழியை குறிக்கிறது.
அது யானைக்கும் அடி சறுக்கும்.

இப்போது கீழே உள்ள படங்களை கவனமாக
பார்க்கவும்


 

என்ன பார்த்து விட்டீர்களா?

மேலே உள்ள படங்களைப் பார்த்து அதற்குரிய 
சரியான பழமொழியை கண்டுபிடித்து 
சொல்லவும்.

அத்தனை பழமொழிகளையும் கண்டுபிடித்தால்
நீங்கள் நிச்சயம் புத்திசாலிதான்.

எங்கே கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

பின்னூட்டம் இடாமல் தப்பித்தால் அது உங்களுக்கு
இழுக்கு.

பின் குறிப்பு : என்னால் இதுவரை ஏழு பழமொழிகளைத்தான்
கண்டுபிடிக்க முடிந்துள்ளது

10 comments:

  1. 1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்
    2. ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கனும், பாடுற மாட்டை பாடித்தான் கறக்கனும்.
    4. பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு இரவில் அதையும் பேசாதே!!
    5. ராஜா எவாழியோ மக்களும் அவ்வழியே!
    7. பாம்பின் கால் பாம்பறியும்!!
    8. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
    10 வீட்டுல எலி வெளில புலி!
    12. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!!
    15. பணம் பத்துக் செய்யும்

    ReplyDelete
  2. 9.தாயை போல பிள்ளை நூலை போல சேலை

    ReplyDelete
  3. Hi,
    Ingea post panninaal, matravangalukku interest poividum, so I will mail you the answeres. You can choose the candidate who gave most answers and publish.

    ReplyDelete
  4. ஒரு தோழர் பத்து பழமொழிகளை சொல்லியுள்ளார். இன்னொரு தோழர் மின்னஞ்சலில் அனுப்புவதாக
    சொல்லியுள்ளார். நாளைதான் பதில்கள் வெளியாகும்.அது வரை யோசியுங்கள், யோசியுங்கள், யோசித்துக் கொண்டே இருங்கள்

    ReplyDelete
  5. 13. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்!
    14. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம்

    ReplyDelete
  6. ஓ பத்து சரியா சொல்லிட்டேனா?! இதுல 3க்கு விடையை என் பசங்க சொன்னாங்க.

    ReplyDelete
  7. வணக்கம் !

    அறிவொளி தவழும் இந்த அழகிய தளத்தை நான்
    இன்று தான் அறிந்துகொண்டேன் .வாழ்த்துக்கள் .
    தங்கள் தளத்தினை அறிமுகம் செய்து வைத்த
    வைச்சரத்திற்க்கும் பெருமையோடு நன்றி கூறிக் கொள்கின்றேன் !!
    http://blogintamil.blogspot.ch/2013/08/4_22.html

    ReplyDelete
  8. என் தோழி ராஜிக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் !!

    ReplyDelete
  9. 13 விடைகள் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete