இன்றைய ஹிந்து
நாளிதழில் பார்த்த செய்தி மிகவும் ஆத்திரமூட்டியது. வெகு காலத்திற்குப் பிறகு
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. இந்த வருடம் சாகுபடி பிழைத்துவிடும் என்று
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடிதண்ணீர் பிரச்சினை ஓரளவு இருக்காது என்று
மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ஆனால் எங்கள்
பிழைப்பு போய் விட்டது என்று ஒரு கூட்டம் புலம்பியுள்ளது.
காவிரி
நிரம்பியுள்ளதால் எங்களால் மணல் அள்ள முடியவில்லை. எப்போது தண்ணீர் வடியும், மணல்
அள்ள முடியும் என்று காத்திருக்கிறோம் என்று அவர்கள் பேட்டியளித்துள்ளனர்.
கேரளாவில் காவிரி மணலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. தாமிரபரணியில் மணல் அள்ள தடை
உள்ளது. காவிரியிலும் தண்ணீர் சென்றால் நாங்கள் என்ன செய்வது என்பது அவர்களின்
ஆதங்கம்.
இதிலே மணல் விலை உயரும் என்ற மிரட்டல் வேறு
இதிலே மணல் விலை உயரும் என்ற மிரட்டல் வேறு
அடப்பாவிகளா,
உங்கள் தலையில் இடி விழ....
ஏற்கனவே
அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு திருட்டுத்தனமாக மணலை கொள்ளையடித்து பல ஆறுகளை
ஒட்ட சுரண்டியது போதாதா? இருக்கும் கொஞ்ச நஞ்சம் மணலையும் கபளீகரம் செய்ய
வேண்டுமா?
உங்கள் தொழில்
நடப்பதற்காக ஆறுகள் வரண்டு போக வேண்டுமா?
நல்ல
சிந்தனையடா! உங்களுக்கு கர்னாடகா ஆட்கள்
எவ்வளவோ மேல்.
இந்த மணல்
கொள்ளை கும்பலுக்கு தாகம் எடுத்தால் யாரும் தண்ணீர் அளிக்கக் கூடாது. மணலையே
சாப்பிடட்டும். அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.
இவர்கள் அடுத்தவன் சாவிலும் ஆதாயம் காண்பவர்கள்.
ReplyDeleteகாசுக்காக பெற்ற தாயையும் கட்டிய மனைவியையும் விற்க தயங்காத படுபாவிகள்.
ReplyDelete