Tuesday, May 28, 2013

காங்கிரஸ்காரனாய், கூலிப்படைத் தலைவனாய் மாறிய ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட்.




கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் என்பது மீண்டும் ஒரு முறை ரத்தச்சேற்றில் நிரூபணமாகியிருக்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டுள்ள காங்கிரஸ்காரர்களில் ஒருவன் மஹேந்திர கர்மா. இவன் ஒன்றும் பெரிய உத்தமன் கிடையாது. சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியவன்.

ஒரு நிலப் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தாலும் சி.பி.ஐ கட்சியில் சேர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரான இவன் அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளால் காங்கிரஸ் கட்சிக்கு தாவுகிறான். அங்கே வெற்றியும் பெறுகிறான். சட்டிஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக என்று சொல்லி சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை அமைக்கிறான். 
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருவர் திசை மாறிப் போனால் 
மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கு தமிழகத்தில் 
சி.பி.ஐ யின் தளி தொகுதி ராமச்சந்திரன் ஒரு உதாரணம் 
போல, சட்டிஸ்கர் மாநில உதாரணம் மகேந்திர கர்மா,

காங்கிரஸ் அரசும் பாஜக அரசும் சல்வா ஜூடுமின் நடவடிக்கைகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணக்காரர்களும் மற்ற முதலாளித்துவ நிறுவனங்களுமும் கூட அள்ளித் தருகிறது. சல்வா ஜூடுமால் அதிகமாக வேட்டையாடப் பட்டது நக்ஸலைட்டுகளை விட அப்பாவி பழங்குடி மக்கள்தான் அதிகம்.

பழங்குடி இனப் பெண்களை பாலியல் வன் கொடுமைகளுக்கு உட்படுத்துவது சல்வா ஜூடுமிற்கு பொழுது போக்கு. காவல்துறையும் மாநில அரசும் ஆதரவு அளித்ததால் அதன் அராஜகத்திற்கு அளவே கிடையாது. ஒரு மாபியா கும்பலாகவே அது செயல்பட்டது. புகார் கொடுத்தவர்களை மிரட்டி பிறழ் சாட்சியாக மாற்றியது பற்றி முன்னரே ஒரு முறை எழுதியுள்ளேன்.

உச்சநீதி மன்றம் தலையிட்டு சட்டிஸ்கர் அரசை தலையில் குட்டி கண்டித்த பின்பே சல்வா ஜூடும் அமைப்பின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த அமைப்பைச் சேர்ந்த பலரை பாஜக அரசு காவல்துறையில் இணைத்துக் கொண்டுள்ளது.

சட்டிஸ்கர் மாநில வன்முறைக் கலாச்சாரம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள் என்றால் மறு பக்கம் அரசு பயங்கரவாதம். அரசு பயங்கரவாதத்திற்கு துணை நின்ற மஹேந்திர கர்மா இப்போது கொல்லப்பட்டு விட்டார். அவரோடு வேறு பல காங்கிரஸ்காரர்களும் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு விட்டனர்.

மக்களின் பாதுகாவலர்களாக தங்களை சித்தரித்துக் கொள்ளும் மாவோயிஸ்டுகள், இத்தாக்குதல்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்வதை விட அவர்களின் வாழ்விற்கு கெடுதல்தான் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களை  கண்டுபிடிக்கிறோம் என்ற போர்வையில் நடத்தும் தேடுதல் வேட்டையால் அப்பாவி பழங்குடி மக்களின் நிம்மதி பறிபோகப் போகிறது. இவர்கள் நிச்சயமாக பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் இருப்பதற்கான காரணம் அங்கே இது நாள் வரை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசும்தான். அவர்களின் கொள்கைகள்தான். எண்ணற்ற இயற்கை வளம் குவிந்திருந்தாலும் வேலையின்மைப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இயற்கை வளத்தை பெரும் முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் சுரண்ட அனுமதிக்கிறது. அவை அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. 

தங்கள் வாழ்வாதரத்தை இழக்கும் பழங்குடி மக்களின் 
பிரச்சினைகளுக்குதீர்வு காணாதவரை மாவோயிஸ்ட் 
பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. மத்தியிலும் 
மாநிலத்திலும் ஆளுகின்ற அரசுகள் தங்களின் 
கொள்கைகளைமாற்றிக் கொள்ள வேண்டும். 
அதுதான் ஒரே வழி.




7 comments:

  1. O.K! fine:When Tamilnadu people going to revange TN congressmen?

    ReplyDelete
  2. பெரியார் திராவிடர் கழகத் தொண்டர் பழனியை கொன்றவன் -ராமச்சந்திரன், ஒரு கம்யூனிஸ்ட் கூலி, அத்தோடு அவன் ஒரு எம்.எல்.ஏ.,வாம். அதைப்பத்தியும் கொஞ்சம் எழுதறது

    ReplyDelete
  3. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருவர் திசை மாறிப் போனால்
    மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கு தமிழகத்தில்
    சி.பி.ஐ யின் தளி தொகுதி ராமச்சந்திரன் ஒரு உதாரணம்
    போல, சட்டிஸ்கர் மாநில உதாரணம் மகேந்திர கர்மா,

    Sir,
    Thali MLA committed all the crimes when he was a communist, and THA PANDIAN ( widely known as COMMUNIST) was supporting all along even after he was exposed.
    Whereas the chattisgarh counter part, came out of the CPI and then his crimes were exposed.

    Every political party has some good personalities and some criminals. Communist party is not an exception.
    Of course the COMMUNISM is the best way for the society till now.

    ReplyDelete
  4. தேவையில்லாத எழுத்தின் வன்முறை நீங்கள் சொல்ல வருகிற கருத்தின் போக்கையே மாற்றி விடும்...
    அதனால் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவன் இவன் என்று ஒருமையில் அழைப்பது உங்கள் கோபத்தை வெளிபடுத்தும்ஆயுதமாய் இருக்கலாம் ஆனால் அதனால் கருத்துப் பரிமாற்றம் என்பது ஒருபோதும் நிகழாது.

    கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்வில்லை என்றால் நீங்கள் இப்படியே காழ்ப்புனர்ச்ச்யோடே எழுதலாம்.

    ReplyDelete
  5. திரு அனானி- தளி ராமச்சந்திரன் குறித்து நிறையவே எழுதியிருக்கிறேன். பழைய பதிவுகளை பார்க்கவும்

    ReplyDelete
  6. திரு கேகேகே - கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்ளவர்கள் திசை மாறிப் போனால் ஆபத்தானவர்களாக மாறி விடுவார்கள் என்பதைத்தான் சொல்ல வந்தேன். தா.பாண்டியன் - கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளார், கம்யூனிஸ்டாக அல்ல, அவருக்கு ஏற்ற சீடர் தளி ராமச்சந்திரன்

    ReplyDelete
  7. திரு அப்பு - உங்களது விமர்சனம் சரியானது. நன்றி. ஏற்றுக் கொள்கிறேன். மரியாதை கொடுக்க மனமில்லாததால் அவன், என்று குறிப்பிட்டேன். எதிர்காலத்தில் வார்த்தைகளில் கவனமாக இருக்கிறேன்

    ReplyDelete