மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கி வரும் சாரதா நிதிக் கம்பெனி
மோசடி மம்தா பான்ர்ஜியின் நாற்காலியையும் ஆட்டம் காண
வைத்துள்ளது. சுதிப்தா சென் செய்த மோசடிகளுக்கு நிதியமைச்சர்
மனைவி நளினி சிதம்பரம் தொடங்கி மம்தா கட்சி எம்.பிக்கள் வரை
ஏராளமானவர்களுக்கு தொடர்புண்டு என தகவல்கள் வந்து
கொண்டே இருக்கிறது.
அவர் ஏற்கனவே எழுதிய கடிதத்திலேயே ஏராளமான வெடிகுண்டுகள்
உண்டு. தான் தலைமறைவாகப் போவதற்கு முன்பு திரிணாமுல்
காங்கிரஸ் கட்சி எம்.பிக்களோடு விவாதித்து ஆலோசனை
பெற்றுத்தான் சென்றதாக இன்னொரு குண்டை வெடித்துள்ளார்.
இதோ அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இன்று
கொல்லப்பட்டுள்ளார். அடுத்து யாருக்கு என்ன நடக்கும் என்று
சொல்ல முடியாது.
சுதிப்தா சென் உயிருக்கே மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு கிடையாது.
உண்மைகளை மறைக்க எது வேண்டுமானாலும் செய்யக் கூடிய
எந்த அளவிற்கும் கீழே இறங்கக் கூடியவர்கள் மம்தா கட்சியினர்.
தலைமை எவ்வழியோ, அப்படித்தானே தொண்டர்களும் செல்வர்?
மோசடிப் பேர்வழியாக இருந்தாலும் சுதிப்தா சென் உயிருக்கு
பாதுகாப்பு வேண்டும். அப்போதுதான் மறைக்கப்பட்ட பணமும்
உண்மைகளும் சேர்ந்தே வெளி வரும்.
பணம் இருந்தால் பிராடுகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும், பணம் இல்லை என்றால் மண்ணின் மைந்தர்களின் நிலங்களையும் சுரண்டப்படும் என்பதற்கு வங்காளமே சாட்சியம் ... ! :(
ReplyDelete