Saturday, May 4, 2013

கருணை மனு விவகாரம் - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பட்டீல் நிராகரித்த கருணை மனு
தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தாஸ் என்பவரது
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.

இது குறித்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம்தான்
குழப்பமாக உள்ளது. 

பிரதீபா பட்டீலுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம்
தாஸின் கருணை மனுவில் மரண தண்டனையை ஆயுள் தண்டனை
என குறைக்கலாம் என்று பரிந்துரை செய்ததை பிரதீபா பட்டீலுக்கு
அனுப்பிய குறிப்பில் உள்துறை அமைச்சகம் சொல்லாமல் 
மறைத்து விட்டது. 

முந்தைய ஜனாதிபதியின் பரிந்துரையை பிரதீபா பட்டீல் அறிய
வாய்ப்பில்லாமல் போய் விட்டது என்றும் அந்த தீர்ப்பில் 
சொல்லப்பட்டுள்ளது. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக
குறைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் அந்த தீர்ப்பில்
சொல்லப் பட்டுள்ளது. அப்துல் கலாம் பரிந்துரையை பிரதீபா
பட்டீலுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவித்துள்ளோம் என்று
உள்துறை அமைச்சகமும் கூறியுள்ளது.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது தண்டனையை
குறைக்கலாம் என்று பரிந்துரைத்தால் அதை அமுலாக்க
வேண்டியதுதானே உள்துறை அமைச்சகத்தின் கடமை.

பின்பு அடுத்த ஜனாதிபதியின் முன் மீண்டும் கருணை மனுவை
அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

இல்லை அப்துல் கலாம் அவர்கள் திட்டவட்டமான முடிவாக
சொல்லாமல் பரிந்துரை என்ற அளவோடு நிறுத்திக் கொண்டாரா?

ஆயுள் தண்டனை போதும் என்று பரிந்துரை செய்த திரு
அப்துல் கலாம் அதை ஏன் தனது முடிவாக்கவில்லை?

கருணை மனுவை நிராகரிக்கும் அதிகாரத்தை திருமதி
பிரதீபா பட்டீல் பயன்படுத்திய போது கருணை மனுவை
ஏற்கும் அதிகாரத்தை திரு அப்துல் கலாம் பயன்படுத்தவில்லை?

என்ன நடந்தது?

யாரவது கொஞ்சம் உண்மையை சொல்லுங்களேன்....
 

No comments:

Post a Comment