அந்த இரவு நானும் இன்னொரு தோழரும் நெய்வேலி அமராவதி திரையரங்கில்
வீர பாண்டிய கட்டபொம்மன் இரவுக் காட்சி பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு
வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. காலை
ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது.
அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க,
இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.
ஒரு அனிச்சை செயலாக நானும் இன்னொரு தோழரும் பக்கத்தில் இருந்த அலுவலகம்
போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டோம். சில நிமிடங்களிலேயே
காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை தொடங்கி விட்டார்கள். திமுக,
சிபிஎம், சிபியை, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு என அத்தனை
கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள்
சங்கத்தின் கொடி.
அதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும் கை வைக்கவில்லை.
அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.
அப்போதே அந்த பயம்!
//அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்
ReplyDeleteஅப்போதே அந்த பயம்!//
அது பயம் இல்லை சந்தடி சாக்கில் அவர்களே தான் மற்ற கட்சி கொடிகளை வெட்டி இருப்பார்கள்
"நெய்வேலி " The new born baby also knows its P M K Kottai
ReplyDelete- Veera Vanniyan
ராஜீவ் இறந்த போது வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் ரிலீசா...?
ReplyDeleteகாங்கிரஸ் - அதிமுக குண்டர்கள்ன்னா அப்போ நீங்க?
ReplyDeleteஐயா, வீர வன்னியன், தமிழகத்திலிருந்து ஆங்கிலத்தை அடித்து துரத்த நீர் ஒருவர் போதும். தொடரட்டும் உமது பணி
ReplyDeleteமிஸ்டர் அனானி, அடுத்த கட்சியின் பேனர்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை தகர்த்து எறிந்து
ReplyDeleteதீ வைத்து கொளுத்தியவர்களை குண்டர்கள்
என்று அழைப்பதா இல்லை தியாகிகள்
என்று பாராட்டுவதா?
திரு கோவை நேரம் - வீர பாண்டிய கட்டபொம்மன் வெளியானது என்னவோ அறுபதுகளில்தான். ராஜீவ் இறந்த அன்று நான் பார்த்தது பத்தாவது முறை. அதற்குப் பிறகும் திரையரங்கில் மட்டும் ஐந்து முறையாவது பார்த்திருப்பேன்.
ReplyDelete