Sunday, May 12, 2013

சாமியாரெல்லாம் சைரன் வச்சுக்க முடியுமா?

இன்று காலை சங்க அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது
ஒரு திருப்பத்திலிருந்து  சைரன் ஒலி கேட்க, ஏதோ  ஆம்புலன்ஸ்
வருகின்றது என்று நினைத்து ஒதுங்கி நின்றேன்.

ஆனால் நான்கு கார்கள் புடைசூழ என்னை கடந்து சென்றது வேலூர்
பொற்கோயில் சாமியார். 
 
சிவப்பு விளக்கு சுழல சைரன் வசதியோடு  கூடிய வாகனங்கள்
யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றங்கள் பல முறை
அரசுக்கு வழிகாட்டுதல் கொடுத்துள்ளன.  அதை அரசுகள்
பின்பற்றுவதில்லை என்பது வேறு விஷயம்.

அரசு நிர்வாகத்தை சேராத, மக்கள் பிரதிநிதியில்லாத 
சாமியார்கள் கண்டிப்பாக சுழலும் சிவப்பு விளக்கோ, சைரனோ
கண்டிப்பாக பயன்படுத்த முடியாது. சொல்லப்போனால்
இது சட்ட விரோதம்.

ஆனால்  நடவடிக்கை எடுப்பார்களா?

மந்திரிகளும் ஆளுனர்களும்  ஏன் நீதிபதிகளும் கூட 
சாமியார்களிடம் ஆசீர்வாதமும் அருள்வாக்கும் வாங்க
காத்துக் கிடக்கும் சூழலில் எனக்கு என்னமோ நம்பிக்கை
இல்லை.

4 comments:

  1. சாமியார்களின் கால்களின் விழும் அதிகாரிகள் இருக்கும் வரை இந்தியா உருப்படாது.

    ReplyDelete
  2. They want to warn the public of his arrival, so that people would be alert and cautious, perhaps!!.

    ReplyDelete
  3. இந்த சாமியாவது தன் சொந்த செலவில் சைரன் வைச்சிகிட்டு சுத்துது... ஆனா ஒரு பதவியும் இல்லாத சுப்ரமணிய சாமி அரசாங்க செலவில் சைரன், கருப்பு பூனை படை என்று விடுர அலம்பல் இருக்குதே... எல்லாம் மக்கள் வரி பணம்

    ReplyDelete
  4. இந்த சாமியார்களீன் அந்தரங்க அறைகளில் தான் கார்பரெட் முதலாளீமார்களின் கருப்பு பணம் கொட்டிக் கிடக்கிறது! ஓய்வு பெற்ற ரிஸர்வ்வங்கி,மற்றும் வங்கி அதிகாரிகள் தான் இந்த கணக்கு வழக்கு களை பார்க்கிறார்கள்! புட்டபர்த்தி சாமி சித்தி அடந்ததும் நடந்தது மறந்து போச்சா---காஸ்யபன்

    ReplyDelete