இன்று உலக புத்தக தினம். படிக்கும் வழக்கம்
குறைந்து போய்க் கொண்டுள்ளது என்ற
வருத்தம் ஒரு புறம் உள்ளது. இல்லை, அது
மீண்டும் எழுச்சி கொண்டு வருகின்றது என்பதை
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வருடமும்
நடைபெறுகின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு
வருகின்ற மக்கள் திரளும் விற்பனையாகிற
புத்தகங்களின் எண்ணிக்கையும் காண்பிக்கிறது.
வாங்கப்பட்ட புத்தகங்களில் எவ்வளவு படிக்கப்
படுகின்றது என்ற கேள்வியும் இயல்பாகவே
வந்தாலும் யாரும் தங்களின் பணத்தை விரயம்
செய்வார்களா என்று சமாதானம் செய்து கொள்கிறோம்.
அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களின் மீது
பரவியுள்ள தூசியை துடைத்து படியுங்கள்.
அறிவிற்கான திறவுகோல் என்பது நிச்சயம்
புத்தகங்களாக மட்டுமே இருக்க முடியும். இன்று
உலக புத்தக தினம். உலக மாமியார் தினம்,
மைத்துனி தினம் என்றெல்லாம் சொல்லி
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தும் உலகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் உலக புத்தக தினம் பற்றியெல்லாம் வாய் திறக்க மாட்டார்கள்.
அனைவரும் படிக்கத் தொடங்கி விட்டால் அவர்கள் எப்படி பிழைப்பு நடத்துவார்கள்.
ஆக இன்று ஒரு நாள் தொலைக்காட்சிக்கு விடுப்பு
அளித்து விட்டு புத்தகங்களைப் படிக்கலாமே!
பாரதி புத்தகாலயம் இன்றைக்கு ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. 500
ரூபாய்க்கு 750 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள்
வாங்கலாம். பொருளாதார சிரமத்துடன் நடந்து கொண்டிருக்கும் பாரதி புத்தகாலயம் புத்தகம் படிக்கும் வழக்கம் முன்னேற வேண்டும் என்ற
நோக்கோடு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.
பல அற்புதமான புத்தகங்களும் உங்களுக்காக
காத்திருக்கிறது.
புத்தகங்களை வாங்கிடுவீர்! அதைப் படித்துடுவீர்!!
அது மிகவும் முக்கியம்.
No comments:
Post a Comment