இது எனக்கு வந்த மின்னஞ்சல். திமுக ஆட்சி மீண்டும் வந்தால் என்ன ஆகும் என்பது பற்றியோ
காங்கிரஸ் கட்சியின் அயோக்கியத்தனம் குறித்தோ
எனக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை. ஆனால்
இந்த மின்னஞ்சலில் சொல்லப்பட்டுள்ள சில
விஷயங்கள் அதிமுக கூட்டணியை குழப்ப
சோர்வடைய செய்வதற்கான சதிகளில் ஒன்றோ
என சந்தேகிக்க வைக்கிறது.
இந்தத் தேர்தலில் தேர்தல் கமிஷன் இவ்வளவு கெடுபிடியாக இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?
இந்தத் தேர்தலின் கூட்டணிக் கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் எப்படிப்பட்டவை? தமிழக ஆளும் கட்சி முதல்வர் ஒரு மகா நாடகக்காரர். டெல்லியின் திரை மறைவு ராணியும் எவ்வளவு பெரிய நாடகக்காரி என்று எல்லோருக்கும் தெரியும். தனக்கு மெஜாரிட்டி இருப்பதாக ஜனாதிபதியிடம் ஒருமுறை நாடகம் ஆடியதையும் சிபீஐ யை அவர் கைப்பாவை யாக வைத்திருப்பதையும் யாராவது மறக்க முடியுமா என்ன??(உ.ம்: குவாத்ரோக்கி) 2G விஷயத்தில் கூட சிபீஐ, இப்போது சுப்ரீம் கோர்ட்டின் நிர்பந்தத்தினால் அன்னையின் இயக்கத்தில் நடிக்கிறது அவ்வளவே... இல்லையென்றால் இவ்வளவு பிரச்னையான சாதிக்பாஷா மரணத்தில் உள்ள மர்மம பற்றியோ, மற்றவர்களிடம் நடந்த விசாரணை பற்றியோ, கனிமொழி மற்றும் தயாளு அம்மாளிடம் நடத்திய கேம்பஸ் இன்டர்வ்யூ பற்றியோ ஏதாவது அறிக்கை உண்டா? வேறெந்த நாட்டிலாவது, இவ்வளவு கறுப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது என்று பகிரங்கமாக தெரிந்த பின்னும் ஒரு அரசாங்கம் இந்த மாதிரி எருமை மாட்டின் மீது பெய்த மழை மாதிரி இருக்குமா என்ன?
இந்த ஆட்சியில், தேர்தல் கமிஷன், சிபிஐ, அமலாக்கப் பிரிவு இன்ன பிறவெல்லாம் சுதந்திரமாக செயல்பட முடியுமா என்ன? ஆமென்றால் ஹசன அலி போன்றோர் நெஞ்சைத்தூக்கி பேச முடியுமா? குவாத்ரோக்கி தப்பித்தான் போக முடியுமா? சிறையிலிருக்கும் ஆ.ராசாவுக்கு, அப்ரூவராக மாறும் எண்ணம இருந்த சாதிக் பாஷா தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு எச்சரிக்கைதான் விட முடியுமா? குவாத்ரோக்கிக்கு கூடுதலாக பிரதமரின் அனுதாபம் வேறு.. நாட்டில் நடக்கும் எதுவுமே தெரியாத ஒரு பொம்மைப் பிரதமர் மாதிரி எல்லாமே பொம்மை நிர்வாகம்தான். சாவி கொடுத்தால் மட்டும் ஓடும்- அதுவும் மகாராணி கை காட்டும் திசையில்!! அங்கே கை காட்டும் மகாராணி என்றால் இங்கே தன கட்சியிடம் கை நீட்டும் “மெகா” டிவி ராஜா கதை தனி...
உள்ளாட்சித் தேர்தல்களின் போதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இதே அரசியல் கூட்டணி தான்.. பாவம். நேர்மையான நரேஷ் குப்தா அப்போது பட்ட பாடு மறக்க முடியுமா! (சேஷனும்தான்)
திமுக கூட்டணியில் இப்போதிருக்கும் ராமதாஸ், முன்னொருமுறை வல்லுனர்களைக் கொண்டு பொது மேடையில் இந்த மின்னணு வாக்கு எந்திரங்களில் சர்வ சாதாரணமாக நமக்கேற்றவாறு மாற்றியமைத்து தில்லு முல்லு எளிதாக செய்ய முடியும் என்று செய்தும் காட்டினார்... நினைவிருக்கிறதா?
பலகீனமான இதயம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்..
யோசித்துப்பாருங்களேன்.... தேர்தல் முடிந்து வாக்கு எண்ண அவகாசம் ஒரு மாதம் இருக்கிற்து. நடக்கப் போகும் தேர்தலில பயன்படுத்தப் போவதும் EVM-மின்னணு வாக்கு இயந்திரங்கள்தான்! ஒரு கம்ப்யூட்டரைஸ்டு விஷயத்தில் தில்லு முல்லு பண்ணுவதற்கு பெரிய ஞானம் கூட தேவை இல்லை என்பதுதான் உண்மை. கிட்டத்தட்ட ஒரு புது டிவி வாங்கியதும் நம் பாட்டிக்கு அந்த ரிமோட் எப்படிப் பயன் படுத்துவது என்று சொல்லிக் கொடுப்பது போலத்தான்!
தேர்தல் முடிவுகள் நிச்சயம் இப்போது ஆளும் கட்சிக் கூட்டணிக்கு சாதகமாகவே அமையும்.(மாற்றி அமைக்கப்பட்டு விடும்). கூட்டணியே அதற்குத்தானே!! தென் மாவட்டங்களின் முடிவை இப்போதே அஞ்சாநெஞ்சன் அறிவித்தும் விட்டார். பழைய இயக்குனர்களின் புதிய படத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மிகச் சிறப்பாக “நடித்துக்” காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நேர்மையாக நடந்ததாகச் சொல்லிக்கொள்ளத்தான், இத்தனை வேடிக்கைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியானதும் அறிவிக்கப்பட்டதும், அனுதாபப்பட வேண்டியவர்கள்.. ஜெ., சுப்பிரமணியன் சுவாமி,சோ,விஜயகாந்த்..
என்னது மக்களா??? இதெல்லாம் அவங்களுக்குப் பழகிப் போச்சுங்க...
எச்சரிக்கை 1: நல்ல தொழில் தொடங்க முனைவோர், அல்லது தொழில் நடத்திக்கொண்டிருப்போர் வேறு மாநிலங்களுக்கு ஓடி விடவும்.
எச்சரிக்கை 2: திரைப்பட உலகினர் தங்களுக்கு ஏற்ற வேறு நல்ல தொழில் தொடங்கும் முடிவு எடுத்து விடவும்.
எச்சரிக்கை 3: ஆளும் கட்சிக்கு எதிராக இணையத்திலும் வேறு ஊடகங்களிலும் எழுதுவோர் குறைந்த பட்சம் அனானி முகமூடி அணிந்து கொள்ளவும்.
எச்சரிக்கை 4: சொந்தமாக நிலம் வைத்திருப்போர் தமிழ்நாடு தவிர வேறு மாநிலங்களில் உள்ள பூமாதேவி கோவில்களில் பிரார்த்தனை செய்து கொள்ளவும்.
எச்சரிக்கை 5: பத்திரிகை நடத்துவோர் மானம் மரியாதை எல்லாவற்றையும் பழைய பேப்பரில் கட்டி பரணில் போட்டு விடவும்.. (இல்லையேல் உங்கள் பத்திரிக்கையும் நம்பர் ஒன.. நம்பர் ஒன பத்திரிகை ஆகி விடும்.)
எச்சரிக்கை 6: வெளி நாட்டில் வாழ்பவர்கள், அங்கேயே பணி நீட்டிப்புக்கு முயற்சிக்கவும்.முடிந்தால் குடும்பத்தினரை அங்கே அழைத்துக்கொண்டு போய் விடவும்.
எச்சரிக்கை 7: ஏதோ ஒரு இடைத்தேர்தலில் வடிவேலு வெற்றி பெற்று, முதற்கட்டமாக மாநில அமைச்சர் ஆவார் அப்படியே MP.,மத்திய மந்திரி, கவர்னர்... .
(மற்ற எச்சரிக்கைகள் எழுதத்தான் நம் வாசகர்கள் இருக்கிறார்களே!!)
----
சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன்
சோனியாவும் சரி, கலைஞரும் சரி, அதிகாரம் இல்லை என்றால் காலி. அதனால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இருந்தாலும் பார்ப்போம். இவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே, எல்லாவற்றையும் பிளான் பண்ண. ஏதாவது எதிர்பாராத சுனாமிகள் வந்து நம்மைக் காப்பாற்றலாம்.
ReplyDelete