2011 ம் ஆண்டிற்கான மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட
புள்ளி விபரங்கள் வெளி வந்துள்ளன. பல்வேறு விபரங்கள் அந்த
அறிக்கையில் தரப்பட்டுள்ளது. மக்கட்தொகை 121 கோடியாக
உயர்ந்துள்ளது என்பதும் ஆண், பெண் சதிவிகிதத்தில் உள்ள
இடைவெளி குறைந்துள்ளது, மக்கட்தொகை அதிகரிப்பு விகிதம்
குறைந்துள்ளது ஆகியவை முக்கியமான தகவல்கள்.
ஆயிரம் ஆண்களுக்கு 932 பெண்கள் என்ற கடந்த மக்கட்தொகை
கணக்கெடுப்பு நிலவரம் இம்முறை 940 என முன்னேறியுள்ளது
மகிழ்ச்சி அளித்தாலும், அந்த மகிழ்ச்சி அடுத்த விபரத்தை பார்க்கும்
போதே மறைந்து விட்டது.
ஆறு வயது வரை உள்ள ஆண் குழந்தைகள் ஆயிரம் என்றால் அதே வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 914 தான்.
கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பில் 927 என்றிருந்த இந்த சதவிகிதம்
இப்போது 914 என சரிந்துள்ளது மிகவும் கவலைக்குரியது.
பெண் குழந்தைகள் பிறப்பது கருவிலேயே தடுக்கப்படுகின்றது அல்லது
பிறந்த பின் கொல்லபபடுகிறது என்பதைத்தான் இந்த புள்ளி விபரம்
உணர்த்துகின்றது. சட்டங்களோ, பிரச்சாரங்களோ இன்னும் வெற்றி பெறவில்லை. நிலைமை முன்னை விட மோசமாகி உள்ளது.
இது சமூக அமைப்பிற்கு கேடு உருவாக்கும் செயல். இந்த நிலைமை
தொடர்வது நல்லதல்ல. இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்?
ஆனால் ஏதாவது செய்ய வேண்டும். வரதட்சணையையும் ஆடம்பரத்
திருமணங்களையும் ஒழித்தால் மட்டுமே பெண்களை சுமையாய்
பார்க்கும் பார்வை மாறும்.
அதை நோக்கி நாம் அனைவருமே முன்னேற வேண்டும்.
உட்பட்ட
No comments:
Post a Comment