மதுரை மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியர் திரு சகாயத்தின் மீது
திமுக குறி வைத்து விட்டது. முதலில் ஒரு சுய உதவிக்குழு தலைவி
மூலமாக புகார், பிறகு திமுக பிரமுகர்கள் அறிக்கை, பிறகு அழகிரியே
நேரடியாக அளித்த புகார், அவசரநிலை கொடுமைகளுக்கே சகாயம்
போன்ற கீழ்நிலை அதிகாரிகள்தான் என்று தமிழக முதல்வரே மறைமுக
குற்றச்சாட்டு என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை கூறி வந்த
திமுக இப்போது சகாயத்தின் கீழே பனி புரியும் ஒரு அதிகாரியை விட்டு
பரபரப்பு புகார் ஒன்றை கொடுக்க வைத்துள்ளது.
நேர்மையான ஆட்சியர் என்று நாமக்கல் மாவட்டத்தில் பெயர் வாங்கிய
திரு சகாயம் , ஆளும்கட்சிக்காரர்களை அனுசரிக்காததால் அங்கிருந்து
தூக்கியடிக்கப்பட்டவர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மதுரை
மாவட்ட ஆட்சியராகி அங்கேயும் நேர்மையாக நடக்க முயற்சிக்கின்றார்.
திருமங்கலம் பாணி தேர்தல் நடத்த தடையாக உள்ளதால் திமுக இப்போது நிலை கொள்ளாமல் தவிக்கிறது. பணப்பாட்டுவாடா மூலம்
வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்று இருந்தவர்கள் இப்போது அந்த வர்த்தகமே நடக்காதோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.
அதனால்தான் இப்போது சகாயத்தை தாக்குகின்றனர்.
இவர்களின் கொள்ளைகளுக்கு உடந்தையாக இல்லாததால், முட்டுக்கட்டை போட்டதால் முன்பு உமாசங்கரை இடை நீக்கம் செய்து
பழி வாங்கினார்கள். இப்போது தேர்தலுக்கு முன்பாக சகாயத்தை
மதுரையிலிருந்து மாற்றுவதற்கு துடிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர்கள் திமுகவின் மாவட்டச்செயலாளர்கள் போல
செயல்பட வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி அது சரியாக
இருக்கும்?
கொடுமைதான் நல்லவர்களுக்கு சோதனை:(
ReplyDeletehttp://arivhedeivam.blogspot.com/2011/03/madurai-collector-sahayam-dmk-election.html