Sunday, April 10, 2011

வேலூர் பாஜக வேட்பாளரின் மோசடி, காமெடி வாக்குறுதிகள்

வேலூரில் போட்டியிடுகின்ற  பாஜக வேட்பாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டிக்கு  ஆதரவு கேட்டு  ஒரு பல வண்ண நான்கு பக்க பிரசுரம் ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது.  எந்த ஒரு பிரசுரம்  வெளியிட்டாலும்  அதிலே 
எந்த அச்சகத்தில்  எவ்வளவு  பிரதிகள்  வெளியிடப்பட்டுள்ளது  என்பதை
வெளியிட வேண்டும். இது  விதி. பத்தாயிரம்  பிரதிகள் அச்சிட்டாலும் 
ஐநூறு  என்றுதான்  வெளியிடுவார்கள்.  ஆனால் பாஜக வேட்பாளர் 
வெளியிட்ட  இந்த பிரசுரத்தில்  அது போன்ற  விபரங்கள்  எதுவுமே 
இல்லை. " உங்கள் செய்தி " என்று  யாருமே கேள்விப்படாத  ஒரு 
வார இதழின் இலவச  இணைப்பு  என்று  சொல்லி வீடு வீடாக 
வீசியெறிந்து விட்டு போயுள்ளார்கள்.  இது அப்பட்டமான  தேர்தல் 
விதிமுறை  மீறல். தேர்தலில்  வெற்றி பெறுவதற்கு  முன்பே இப்படி 
ஒரு மோசடி  என்றால்  இவர்களெல்லாம்   வெற்றி பெற்றால் ? 
இந்த நான்கு பக்க பல வண்ண பிரசுரத்தை  தேர்தல் செலவில் தேர்தல்
ஆணையம்  கணக்கெடுத்துக் கொள்ளுமா?  

வெற்றி பெற்றால் இந்த தொகுதியை  துபாயாக மாற்றுவோம், 
சிங்கப்பூராக மாற்றுவோம்  என்று   அனைவரும்  வாக்குறுதி கொடுப்பது
வழக்கம். இவர்  சற்று  அதிகமாகப் போய்  கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு  2013 ல் வேலூர்  எப்படி  இருக்கும்  என்று படம் போட்டு 
காண்பித்துள்ளார்.  

சர்வதேச விமான நிலையம்,
சி.எம்.சி முன்பு  எலிவேட்டரோடு சப்வே, 
குளிர்சாதன வசதியோடு மீன் மார்க்கெட், 
ஆசியப் போட்டிகள் நடத்தும் வசதியோடு  மைதானம். 

மிகுந்த கற்பனைத்திறனோடு   பலரும்  பேசிக்கொள்வது போல  எழுதப் 
பட்டுள்ளது. மாதிரி படங்களெல்லாம்  சூப்பர். Now the Technology has 
improved so much. காசா, பணமா வெறும்  வாக்குறுதிதான்  என்று அள்ளி விட்டுள்ளார். எப்படியும்  ஜெயிக்கப்போவதில்லை  என்ற நம்பிக்கைதான்.

ஒரு வாக்குறுதியை  நிறைவேற்ற  வாய்ப்பு உள்ளது. வேலூரை  குஜராத் போல மாற்றுவேன்  என்ற வாக்குறுதியை  நிறைவேற்றலாம். வேலூர் கோட்டையில்  உள்ள  திப்பு மசூதியை  திறக்கக்கூடாது  என்று வம்பு
செய்து விஷம் கக்கும்  பிரச்சாரத்தை  செய்தது  இவரது கும்பல்தானே. 
மத நல்லிணக்க  வேலூரை  மதக்கலவரக் காடாக மாற்ற பல 
வருடங்களாக  சங் பரிவாரக்கும்பல்  முயல்கின்றதே! 


ஜக்கி வாசுதேவ்  சாமியார்  வாக்களியுங்கள்  என்று சொன்னதை வேறு 
கட்டம் கட்டி  போட்டிருக்கின்றார்.  எல்லா சாமியார்களுக்கும்  வேலூரில் 
பக்தர்கள்  உண்டு. ரஞ்சிதா வீடியோவிற்குப் பிறகும் நித்யானந்தா 
சாமியாரின் பக்தர்கள்  அப்படியே உள்ளனர்.   ஜக்கி சாமியார் படம் 
போட்டால்  வோட்டு கிடைக்கும்  என்ற எண்ணம் போலும்! 

மதம், இனம், பிரிவு அல்லது பணம் இவற்றுக்காக ஒட்டு போடுவது ஜனநாயக முறையை அழித்து விடும். - இது சாமியார் சொன்னது. 
மத வெறியை மட்டுமே  அடிப்படையாகக் கொண்ட பாஜக வின் 
வேட்பாளர்  இதை சொல்வது மிகப்பெரிய காமெடி.
 
 

2 comments:

  1. பா.ஜ.க மதவெறி பிடித்தக் கட்சி. உங்களைப்போன்ற ஆட்கள் திருந்தப்போவதில்லை.
    இந்தியாவில் பொதுத்துறை மற்றும் அரசுத்துறையில் செங்கொடி ஏந்தி நாசம் பண்ணியவர்கள் தொழிற்சங்க வியாதிகள். ஆனால் கம்யுனிச சீனாவில் கொடுங்கோள் ஆட்சி நடைபெறுவதை கண்டு கொள்ளமாட்டீர்கள்.
    வேலையற்றவர்கள். இன்னும் எழுதுங்கள். படிக்க எங்களைப்போன்ற மாக்கான் உள்ளனர்.

    ReplyDelete
  2. மணி அண்ணே, வெறுப்பில் பேசாதீர்கள். பொதுத்துறையை நாசம் செய்ததது காங்கிரஸ். அதை குழி தோண்டி புதைக்க சதி செய்தது
    பாஜக. அருண் ஷோரி செய்த அக்கிரமங்கள் பற்றி பிறகு எழுதுகின்றேன்.

    தேசத்தை பாதுகாப்பது, ஏன் உலகையே பாதுகாப்பது செங்கோடிதான்.

    பாஜக போன்ற மதவெறி பிடித்த கூட்டத்தை அம்பலப்படுத்துவதுதான் எங்கள் வேலையே. அதற்காக எழுதுவோம், எழுதுவோம். எழுதிக் கொண்டே இருப்போம். இந்தியர்கள் மாக்கான்களாக இருக்கக்கூடாது என்பதற்காக எழுதுவோம். நாங்கள் வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவர்கள்.

    ReplyDelete