நேற்றைய ஆங்கில இந்து செய்தியின் அடிப்படையில் . . .
காங்கிரஸ் கட்சி தலைவர் பவன் கேராவிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுத்துள்ளது.
ஏன்?
அஸ்ஸாம் பாஜக முதல்வர் ஹிமண்ட பிஸ்வாஸ் சர்மாவின் மனைவி ரிங்கு சர்மா அவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் படி அஸ்ஸாம் போலீஸ் அவரை கைது செய்ய தேடுகிறது.
முதல்வரின் மனைவி ஏன் புகார் கொடுத்தார்?
அஸ்ஸாம் முதல்வரின் மனைவிக்கு எகிப்து, அமீரகம், இந்தியா என்று மூன்று நாடுகளின் பாஸ்போர்ட் உள்ளது என்று பவன் கேரா, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். அந்த பெண்மணிக்கு 50,000 கோடி மதிப்பில் அமெரிக்காவில் ஒரு கம்பெனி இருப்பதாகவும் துபாயில் சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.
அது மட்டுமா சொன்னார்?
அஸ்ஸாம் முதல்வர் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் செய்கிறார். ஆனால் அவரது மனைவியோ இரண்டு இஸ்லாமிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளார்.
இது போதாதா?
புகார் கொடுத்து விட்டார். முதல்வரின் மனைவியின் புகாரை அந்த மாநில காவல்துறை அலட்சியப்படுத்துமா? அதனால் அவர்கள் கைது செய்ய துடிக்கிறார்கள்.
முதல்வரின் மனைவி கொடுத்த புகாரும் பவான் கேராவின் குற்றச்சாட்டுக்களும் அரசியல் பகைமையின் வெளிப்பாடு. அதனை வழக்கு விசாரணையில் முடிவு செய்து கொள்ளட்டும் என்று சொல்லி முன் ஜாமீன் கொடுத்த உச்ச நீதிமன்றம் இன்னொன்றையும் சொல்லியுள்ளது.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பவன் கேராவை தரக்குறைவான (UN PARLIAMENTARAY) வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதுவும் சரியல்ல என்று சொல்லியுள்ளது உச்ச நீதிமன்றம்.
பாஜக வாஷிங் மெஷினால் உத்தமராக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ்காரர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவை அவ்வளவு சீக்கிரமாக விட்டுக் கொடுக்குமா பாஜக?
அஸ்ஸாமில் வெற்றி பெற்றால் அவரைத்தான் மீண்டும் முதல்வராக்கும்.
எல்லாம் காலக் கொடுமை!

No comments:
Post a Comment