Saturday, January 29, 2022

அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு

 



ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக்கியமான முகநூல் பதிவு.

 இந்த பதிவை படித்தாலாவது புத்தி வரும் என்ற மூட நம்பிக்கை எல்லாம் எனக்குக் கிடையாது. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை அப்பாவிகள் நம்ப வேண்டாம் என்பதற்காகவே பகிர்ந்து கொள்கிறேன்.

 பதிவின் தலைப்பில் முதலில் வானதி அம்மையாரின் பெயர் இல்லை. அவருக்காக ஒரு ஸ்பெஷல் பாயஸத்தை மாலை தர இருப்பதால் இந்த பதிவின் தலைப்பில் இணைத்துக் கொண்டேன்.

 


நான் அப்போது திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தீபாவளிக்கு அடுத்த நாள் மெரூன்-வெள்ளை சீருடையில் வர வேண்டும் என்கிற கட்டாயமில்லை. தீபாவளிக்கு வாங்கிய புது ஆடைகள் அணிந்து வரலாம். வீட்டில் தீபாவளி கொண்டாடும் வழக்கமில்லாததால் நான் சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்றேன். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஒரு பாதிரியார். வகுப்புக்கு வந்த அவர் நீ ஏன் வண்ண ஆடை உடுத்தவில்லை என்று கேட்டார். தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என்பதால் புது உடை வாங்குவதில்லை என்றேன்.

 நீ ஒரு இந்துதானே என்றார்

 பிறப்பால் என்றேன்

 உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து சாமிக்கு படைப்பதில்லையா?

 சாமிக்கு என்று சொல்லி விட்டு நாம்தானே தின்கிறோம் என்று நான் சொன்னதும் வகுப்பில் சிரிப்பு

கடவுள் நம்பிக்கை இல்லையா?

 எனக்கும் எங்கள் வீட்டில் யாருக்கும் இல்லை..

 உங்கள் அம்மாவுக்குக் கூடவா? (இது அடிக்கடி நான் எதிர் கொள்ளும் கேள்வி. பெண்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது இயற்கையிலேயே அவர்கள் கூந்தலுக்கு நறுமணம் இருக்கிறது என்பது போன்ற ஒரு நம்பிக்கை)

 ஆம்

 கடவுள்தானே உலகை நடத்திச் செல்கிறார். ரயில் எஞ்சினைப் போல….?

 ரயில் எஞ்சின் தானாக ஓடுவதில்லை. அதை இயக்க ஒரு மனிதனும், எரிசக்தியும் தேவை..

 இப்படியாக பாதிரியாருடன் விவாதம் நீண்டது

 உனக்கு இந்தப் பள்ளியில் யார் இடம் கொடுத்தது?

 தலைமை ஆசிரியரான பாதிரியார் இக்னேசியஸ்தான்…. என் அப்பா அவரைச் சந்தித்து 9 ஆம் வகுப்பில் எனக்கு இடம் கேட்டார். என்னுடைய 8 ஆம் வகுப்பு மதிப்பைப் பார்த்து பாதிரியார் இடம் கொடுத்தார்

 உங்கள் அப்பா என்ன செய்கிறார்?

 அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்.

 அமைதியாக அதைக் கேட்ட உதவித் தலைமை ஆசிரியர் சிந்தித்தவாறே வெளியே சென்றார்..

 அத்தோடு என் பள்ளி வாழ்க்கை முடிந்தது என நினைத்தேன்

 அடுத்த வாரம் வகுப்புக்கு வந்த பாதிரியார் என்னை முறைத்துப் பார்த்தார். ஏன் நீளமாக முடி வளர்த்திருக்கிறாய். get your hair cut (முடியை வெட்டு) என்று மட்டும் சொன்னார். அவருக்கு அது மட்டுமே பிரச்சினை. கடவுள் நம்பிக்கை அல்ல

 அதே பள்ளியில் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு வரை படித்து, ஜோசப் கல்லூரியில் பியுசி ஒரு வருடமும், பி மூன்று வருடங்களும், எம் இரு ஆண்டுகளும் படித்து விட்டுத்தான் வந்தேன்

 இன்றும் திருச்சியை நெருங்கும் நேரத்தில் செயிண்ட் ஜோசப் பள்ளி வளாகத்திலிருக்கும் சர்ச் கோபுரத்தை காவிரிப் பாலத்திலிருந்து பார்க்கும் போது உடல் சிலிர்க்கும். அது பக்தியினால் அல்ல..

No comments:

Post a Comment