Saturday, May 2, 2026

அந்த பேனர் தப்புதானே மோடி?

 


முக நூலில் பார்த்த படம் கீழே உள்ளது.



மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை தயாரிக்கும் குழு என்று நக்கலாக பேனரில் சொல்லப்பட்டுள்ளது.

அது தவறு.

"பெண்களின் காவலர்கள்" என்று பேனரில் எழுதியிருக்க வேண்டும்.

ஆமாம்.

அவர்கள் எல்லாம் யார் தெரியுமல்லவா?

நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் இருவர் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இஸ்ரேல் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் செய்து முடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நின்று கொண்டிருப்பவர்கள்.

ராம் ரஹீம் சிங் - இரண்டு பாலியல் வன் கொடுமை வழக்குகளுக்காக சிறையில் இருக்கும் சாமியார். மோடியின் அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது பரோலில் வெளி வருபவர்.

ஆச்சாராம் பாபு - பாலியல் வன் கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். அவர் காலில் விழுந்து மோடி ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

மூன்றாவதாக நிற்பவர் உனாவ் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார். பாலியல் வன் கொடுமை செய்து நியாயம் கேட்ட தந்தையை கொன்று சாட்சி சொல்ல சென்றவர்களை விபத்து என்ற பெயரில் கொன்று இப்போது ஆயுள் தண்டனை பெற்றவர். மோடியும் மொட்டைச் சாமியாரும் அவரை பாதுகாக்க முயன்றார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

அடுத்து நிற்பவர் ஹர்தீப்சிங் பூரி, மத்திய அமைச்சர், எப்ஸ்டீனுடன் பழக்க வழக்கம் வைத்திருந்தவர்.

பூரிக்குப் பக்கத்தில் ப்ரஜ்வால் ரேவண்ணா, பாஜகவின் கூட்டாளியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர், முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரன், அவர் மீது பாலியல் வன் கொடுமை குற்றச்சாட்டுக்கள் கொடுத்தவர்கள் இது வரை வெறும் ஐம்பது பேர்தான். அவர் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் மோடியோடு ஒரு போட்டோ ஷூட் செய்திருந்தார்.

ரேவண்ணாவின் பக்கத்தில் நிற்பது மோடியால் பாதுகாக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் சீண்டல் புகார் கொடுக்கப்பட்ட பிரஜ்பூஷண் சரண்சிங். இவருக்குப் பதிலாக இவர் மகனை எம்.பியாக்கி அழகு பார்த்தார் மோடி.

கடைசியாக நிற்பவர்தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன். உலகெங்கும் உள்ள சபலப் பேர்வழிகளுக்கு பிள்ளைக் கறி (விபரம் தெரியாதவர்கள் கமலஹாசன் நடித்த மகாநதி பார்க்கவும்) பரிமாறிய உத்தமன்.

இத்தனை அவதார புருஷர்களை வெறுமனே "மகளிர் மசோதா தயாரிக்கும் குழு"  என்று சுருக்கி விடலாமா?

"பெண் இனக் காவலர்கள்" என்று சொல்வதுதானே சரியாக இருக்கும் மோடி? 



No comments:

Post a Comment