Saturday, January 29, 2022

பொய் சொல்லி, பயந்தாங்குள்ளி வானதி அம்மையார்

 


சங்கிகளுக்கு வரலாறும் தெரியாது. பூகோளமும் தெரியாது. வன்மமும் பொய்யும் நச்சுப் பிரச்சாரமும் மட்டும்தான் தெரியும் என்பதற்கு வானதி அம்மையார் ஒரு உதாரணம்.

அவரது ட்வீட்டை  பாருங்கள். அதை அவசரம் அவசரமாக அவர் நீக்கி விட்டார். அதற்கான காரணத்தை சொல்கிறேன்.



ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில். அதனால் வானதி சொல்வது முட்டாள்தனமான பொய் என்று சொல்ல முடியும். 

திருக்காட்டுப்பள்ளி வேறு, மைக்கேல்பட்டி வேறு. 

திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் சென்றால் முருகன் கோயில் முதல் ஸ்டாப். ஒன்பத்து வேலி அக்ரஹாரம், ஐஸ் பேக்டரி இரண்டாவது ஸ்டாப். மூன்றாவது ஒரு ஸ்டாப் வரும். நான்காவது ஸ்டாப் மைக்கேல்பட்டி சர்ச்.

திருக்காட்டுப்பள்ளி எப்போதும் போல அக்னீஸ்வரர் (தீயாடியப்பர்) கோயில் பங்குனி உத்திர விழாவைக் கொண்டாடிக் கொண்டு, முருகன் கோயில் தீமிதி விழாவோடு மதம் மாறாமல்தான் உள்ளது. மைக்கேல்பட்டிக்கு இரண்டு ஊர் தள்ளியுள்ள வரகூர் கிருஷ்ணன் கோயில் உறியடித் திருவிழா மிகவும் பிரசித்தம். அதற்கடுத்த ஊர் பெயர் மறந்து விட்டது. இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கும் ஊர். ஆனால் எப்போதும் அமைதியாக இருக்கிற பகுதி அது.

 மைக்கேல்பட்டியிலிருந்து எத்தனையோ மாணவர்கள் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என் வகுப்பில் கூட மைக்கேல்பட்டியிலிருந்து லூயிஸ் என்ற நண்பனும் ஞானச் செல்வி என்ற மாணவியும் படித்தார்கள்.

மோசமான ஒரு இயற்பியல் ஆசிரியர், அந்த மாணவியை எப்போதும் ஞான சூன்யம், உனக்கு யார் அந்த பெயர் வைத்தார்கள் என்று திட்டிக் கொண்டே இருப்பார்.

நல்ல வேளை, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மத ரீதியான பிரச்சினையும் வரவில்லை.



1 comment:

  1. ஒருத்தர் மலை மலையாக கதை விடுவார், ஒருவர் நதி நதியாக பொய் சொல்வார்.

    ReplyDelete