Saturday, January 7, 2017

தொடரும் காவிகளின் கயமைத்தனம்காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி மீது அநாகரீகத்தாக்குதல் நடத்தி அசிங்கப்பட்ட காவிகள் இன்னும் ஒரு கயமைத்தனத்தை செய்துள்ளனர்.

அவர்கள் நடத்திய அந்த ஆபாசத்தாக்குதலை மூடி மறைக்க ஏதோ ஜோதிமணியே தன் மீது தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக ஒரு போட்டோஷாப் ஒன்றை பரவ விட்டுள்ளார்கள். இது குறித்த அவரது பதிவு கீழே உள்ளது.

காவிகள் அயோக்கியர்கள் மட்டுமல்ல மூடர்கள் என்பதையும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை தன் கட்சியினரின் ஆபாச நடவடிக்கைகளை ஆதரிக்கிறாரா என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

 இப்படியொரு பதிவு முகநூலில் உலவுவதாகவும்,நண்பர்களுக்கு மட்டும் இதை நான் ரகசியமாக பகிர்ந்துள்ளதாக சொல்லப்படுவதாகவும் தம்பி சந்துரு எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

பிஜேபியின் தொழில்நுட்ப பிரிவு தான் என்மீதான ஆபாசபாலியல் வன்முறை தாக்குதலை க
ட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் இது.

எவ்வளவு திறமையான போட்டோஷாப் இது ! உண்மையிலேயே வியக்கிறேன்.

ஆனால் பாருங்கள் ஜனவரி 4ஆம் தேதி காலை 8.07மணிக்கு இந்தப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே தேதி, இதே நேரத்திற்கு எனது உண்மையான பதிவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான போஸ்டரை வெளியிட்டு எழுதியிருந்ததாகும்.

ஆபாசமும்,பொய்களும் ,மலிவான விளம்பரங்களும் பிஜேபியின் ஆயுதங்கள். அது என்போன்ற கடும் உழைப்பும்,கொள்கைப்பிடிப்பும், நேர்மையும்,நெஞ்சில் துணிவும் உள்ள அரசியல்வாதிக்குத் தேவையில்லை.

ஆஸ்திரேலியாவின் பளபளப்பான சாலைகளை குஜராத்தில் இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்வதும், மோடியை விமர்சிக்கும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவதும் பிஜேபிக்கு கைவந்த கலை.

பிஜேபி இங்கு வளர்வதை நான் உண்மையிலேயா விரும்பவில்லை. இதை பகிரங்கமாகவே சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

ஒன்றுமறியாத அப்பாவி இளைஞர்களுக்கு மதவெறியூட்டி, அவர்களை பாலியல் வக்கிரம் மிகுந்த மனநோயாளிகளாக மாற்றி, அதையே தங்களை விமர்சிக்கும் பெண்களுக்கு(ஆண்களுக்கும் கூட) எதிரான ஆபாச பாலியல் ஆயுதமாக மாற்றி உருக்குலைக்கிற சித்தாந்தம்,அரசியல் கட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஆபத்தானது. இதை மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்துவருகின்றனர்.

இளம்பெண்களுக்கும்,இளைஞர்களுக்கும் இந்த கட்சி எவ்வளவு ஆபத்தானது என்பதை நான் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பல பெண்களும்,குடும்பமும் வெளியிலேயே வரமுடியாமல் இருக்கிறார்கள் என்பதை எனக்கு வரும் அலைபேசி அழைப்புகளும் ,வாட்ஸ் அப்,முகநூல் செய்திகளும் சொல்கின்றன.

இந்த ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றவும், பெண்களின் கண்ணியத்தையும்,இளைஞர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றவே இந்த போராட்டத்தை பொதுவெளியில் முன்னெடுத்துள்ளேன்.

இம்மாதிரியான சமூகத்திற்கு ,தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொடூரமான வக்கிரங்களை,வழிமுறைகளை,
வன்முறைகளை,வெறுப்பை பிஜேபி கைவிட்டு நாகரிகமான ,மக்கள் நல அரசியலை முன்னெடுக்கும் வரை பிஜேபிக்கு எதிரான இந்த யுத்தத்தை மக்கள் துணையோடு தொடர்ந்து நடத்துவேன் என்று உறுதியோடு சொல்கிறேன்.

"நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெதிகளும் கொண்ட "பாரதியின் பெண்களை இப்படி ஆபாச பாலியல் அச்சுறுத்தல்களால் ,போட்டோஷாப்களால் எதிர்கொள்ள நினைக்கும் உங்கள் அறியாமையை நினைத்து வருந்துகிறேன். இனிமேலாவது திருந்தி நல்வழியில் நடங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்கள் இதைப் பகிரவும். இவர்கள் போடோஷாப்,ஆபாச முகமூடியை கிழித்தெறிவோம்.நன்றி

 

No comments:

Post a Comment