Saturday, October 17, 2015

நீயெல்லாம் ஒரு முதல்வர்! தூ...மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியானா மாநில முதல்வர் மனோகர் கட்டாரை இப்படி ஒருமையில் அழைப்பது நாகரீகமில்லை என்று என் மனசாட்சி என்னை கண்டிக்கிறது.

ஆனாலும் என் செய்வேன்?

"முஸ்லீம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டுமென்றால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என்று  அராஜகமாக நிபந்தனை விதிக்கிற போது என் கண்ணிலே தெரிவது ஒரு மதவெறியனே தவிர முதலமைச்சர் இல்லையே!

"சுதந்திரத்தை விரும்பும் பெண்கள் நிர்வாணமாக வருவதில்லையே" என்று வாயில் ஜொல்லு ஒழுக கேட்கிற போது வக்கிர புத்தி கொண்ட, ஆபாசக்குப்பை மனதில் நிரம்பியுள்ள ஆணாதிக்கவாதி தெரிகிறானே தவிர அங்கே முதலமைச்சர் காணவில்லை.

இவ்வளவு கேவலமான சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு அதை பேசியும் திரிகிற ஒரு ஜந்துவை என்ன செய்தால் தகும்?

இது அவர் சொந்தக் கருத்து என்று சொல்லி அவர் சார்ந்த கட்சி பிரச்சினையை கடந்து போய் விடும். தமிழிசை, வானதி போன்ற பிரச்சார பீரங்கிகள், அவர் சொன்னதில் என்ன தவறு என்று ஏதாவது தொலைக்காட்சியில் நம் செவியடைக்க பேசினாலும் வியப்படைய ஒன்றுமில்லை.

தனக்கு திருமணமான தகவலையும் மனைவியையும் சேர்த்தே மறைத்து வைத்திருந்த ஒரு மனிதனை பிரதமராக்கிய வித்தியாசமான கட்சி அல்லவா அது!

 

7 comments:

 1. Cool Sir

  these guys are well planned to execute the crimes and they are doing.....

  with the unity we have to break it.... i am not going surprise ...all these action having equal reactions.....

  seshan

  ReplyDelete
 2. Raman sir,
  thanks for variety of information.
  Few questions/clarifications requested from you,

  1) unmarried is an eligibility for that post?,
  it is His personal (may be issues between the husband and wife)
  he wish to tell or not up to them. Criticizing personal is very bad thing, endless.

  2) If a Bengal communist sleeps on Currency, I cannot spit you (pl.don't take it direct- you) correct?
  so, It is wrong for anybody speaks/speech to target Mr Modi,
  like if any communist leader goes for some bad alliance,
  It cannot blame you,since you are part of the group, correct?

  4) why don't you mention which state
  :"arasu rowdithanam" and this post title also
  any reason like paraparappu news
  (if so you are also a common politician, feel sorry!.)

  I am not supporting anybody, hope you understand.
  but as per me "personal things" should not be asked/discussed,
  even though he is a public servant, publicly.

  where Gandhi, Kamarajar...etc..etc personalities respect others
  personnel.I wish you try to become one of them, to mention in future.

  regards,
  Y .Anna.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. மனைவியோடு வாழ்வதா இல்லையா என்பது மோடியின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் போன தேர்தல் வரை வேட்பு மனுவில் திருமணமாகாதவர் என்று எழுதியது மோசடி

   Delete
 3. வணக்கம் சார், திரிபுராவில் கரென்சி நோட்டின் மீது படுத்தவர் ஒரு சாதாரண கட்சி உறுப்பினர். திடீரென் பணத்தைப் பார்த்த மோகத்தில் செய்த முட்டாள்தனத்திற்காக அவர் கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்பட்டார். அதையும் ஹரியான முதல்வரின் ஆபாசப் பேச்சையும் ஒப்பிடும் தாங்கள் ஒரு அரசியல் மேதை. அந்த வெறியூட்டும் பேச்சுக்களை ஊக்குவிப்பதே மோடியின் கள்ள மௌனம் என்பதை மறைக்கிறீர்கள்?

  மனைவியோடு வாழ்வதா இல்லையா என்பது மோடியின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் போன தேர்தல் வரை வேட்பு மனுவில் திருமணமாகாதவர் என்று எழுதியது மோசடி. அப்படிப்பட்ட ஒருவருக்கு பிரதமராக இருக்கும் தார்மீக அருகதை கிடையாது.

  அந்த நேர்காணலை மீண்டும் படித்துப் பாருங்கள். மேற்கு வங்க மாநிலம் என்பது எங்கும் மறைக்கப்படவில்லை. அரசு ரௌடித்தனம் மட்டுமே அங்கு நடக்கிற போது அதை தலைப்பாக வைப்பதில் என்ன தவறு?

  நான் அனைவரையும் மரியாதையாகத்தான் அழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் காவிக்கும்பல் அதற்கான தகுதியோடு நடந்து கொள்ளவில்லையே.

  இது எல்லாம் உங்களுக்கும் தெரியும். இருந்தாலும் என் வாயை கிளறுவதில் உங்களுக்கு ஒரு ஆசை. இப்ப திருப்தியா ஐயா?

  இன்னும் இரண்டு நாட்கள் கடுமையான வேலைகள் உள்ளது. அதனால் அடுத்த வாரம் இந்த விவாதத்தை தொடரலாம். நீங்கள் விரும்பினால்


  ReplyDelete
 4. thonda thonda
  pala information
  varugirathu allavaa!!
  adhuthaan kaaranam!!, verillai!!

  All the best for your Hard works!

  Y-Anna

  ReplyDelete
 5. 22.10.2013 அன்று எழுதியது

  இது எங்களால் மட்டுமே முடியும்?

  நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது. திரிபுராவில் ஒருவர் முட்டாள்தனமான ஒரு வேலையைச் செய்ய அதை வைத்து அவரவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். எழுதித் தீர்த்தார்கள். தினமலர் பத்திரிக்கைக்கு இதை விட வேறு பிழைப்பு கிடையாதே.

  இதோ நேற்றைய தீக்கதிர் செய்தியை படியுங்கள்.
  ------------------------------------------------------------------------------
  கட்சியிலிருந்து நீக்கம்

  அகர்தலா, அக். 20 -
  திரிபுராவில் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சமர் ஆச்சார்ஜி என்பவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீக்கியுள்ளது.
  இந்த அறிவிப்பை திரிபுரா மாநிலத்தின் சதார் மண்டலக் குழுவின் செயலாளர் சமர் அதயா வெளியிட்டுள்ளார்.

  திரிபுரா மாநிலம் சதார் பகுதியில் பன்குமாரி பகுதியைச் சேர்ந்தவர் சமர் ஆச்சார்ஜி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப் பினரான இவர், தனது படுக்கையில் ரூ.20லட்சம் பணக் கட்டுகளைப் பரப்பி தூங்கியதாக ஊடகங்களில் வீடியோ செய்தி வெளியானது. இதுகுறித்து உடனடியாக கட்சியின் சதார் மண்டலக்குழு விசாரணை நடத்தியது.
  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மண்டல செயலாளர் சமர் அதயா, மேற்கண்ட செயலில் ஈடுபட்ட சமர் ஆச்சார்ஜி உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற முட்டாள்தனமான, நாகரீகமற்ற செயல்களில் எமது கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அத்தகைய நபர்களை பாதுகாக்கவும் மாட்டோம் என்றும் கூறினார்.

  முன்னதாக இந்தச் செய்தியை தமிழக ஊடகங்கள் உள்பட நாடெங் கிலும் உள்ள ஊடகங்கள் `அதிபயங்கரச்’ செய்தியாக ஊதித் தள்ளின. மேற்கண்ட சமர் ஆச்சார்ஜி தனது ஒப்பந்தத் தொழிலில் அதிகபட்சமாக பெற்றுள்ள ரூ.20லட்சத்தை படுக்கையில் பரப்பி வீடியோ காட்சியாக பதிவு செய்தார் என்பதே உண்மையான தகவல் ஆகும்.

  ஆனால் அதற்கு மாறாக ஊடகங்கள், மேற்கண்ட நபர் ரூ.2.5 கோடி பணத்தை பரப்பி படுத்திருந்ததாகவும், மிகப்பெருமளவில் திரிபுராவில் ஊழல் நடப்பதாகவும் கதைகட்டி எழுதின. ஆனால் அது உண்மையல்ல என்று கட்சியின் சதார் மண்டல செயலாளர் சமர் அதயா தெரிவித்துள்ளார்.

  ------------------------------------------------------------------------------------------------


  ஒருவர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஈடுபடும்போது. மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும்போது அவர் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் உள்ள ஒரே ஒரு கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. அவர்கள் தலைவர்களா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களா? அவர்கள் போனால் எத்தனை பேர் கூடப் போவார்கள் என்றெல்லாம் பார்க்காமல் செயல்படும் பாரம்பரியமும் நேர்மையும் எங்களுக்கே உரியது.

  வேறு எந்த கட்சியால் இப்படி நெஞ்சுயர்த்தி சொல்ல முடியும்?

  மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை பாதுகாப்பு வளையம் அளிப்பதைத் தான் செய்கிறார்களே தவிர தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது. எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். அதற்கு நேரமும் போதாது, பக்கமும் போதாது.

  நேற்று உற்சாகப் பெருவெளியில் மிதந்தவர்கள் இன்று ஏன் அமைதியாக இருக்கின்றார்கள். தவறு நடக்கும் போது மகிழ்கிறவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் போது வந்த வழி தெரியாமல் மறைந்து போய் விடுகின்றனர்.

  ஏனென்றால் அது அவர்களுக்கு விருப்பமில்லாதது.

  ReplyDelete