Saturday, January 18, 2025

கணக்கு உதைக்குதே ஆட்டுக்காரா?

 


கீழேயுள்ள செய்தியை நேற்றிலிருந்து சங்கிகள் பரப்பி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.


அந்த பார்வையில்லாத இளைஞருக்கு இப்போது எவ்வளவு வயது இருக்கும்?

குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து வயதாவது இருக்கும். அதிகமாக இருக்கத்தான் வாய்ப்புள்ளதே தவிர குறைய வாய்ப்பே இல்லை.

ஆட்டுக்காரன் பற்றி முதன் முதலில் எப்போது செய்தி வந்தது?

கர்னாடகாவில் ஏதோ பிரச்சினை காரணமாக ஐ.பி.எஸ் பதவியிலிருந்து ஓடி வந்து ஆட்டு வியாபாரம் செய்த போது பசுமை விகடன் வெளியிட்ட கட்டுரைதான் ஆட்டுக்காரனுக்கு தமிழ்நாட்டில் முதல் அறிமுகம்.

அந்த கட்டுரை எப்போது வந்தது?

இதோ அதையும் தருகிறேன்.


10 ஜூலை 2020 இதழில்தான் முதலில் செய்தி வருகிறது.

அந்த செய்தியை அப்போதே அந்த சிறுவன் படித்ததாக எடுத்துக் கொள்வோம். அப்போது ஆறாவது படித்த சிறுவன் இப்போது பத்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனா போட்டோவில் இருப்பது?

சங்கிகள் எதைப் பேசினாலும் பொய். எதை செய்தாலும் அது திருட்டுத்தனம். 

1 comment:

  1. எல்லாம் உங்க கண்ணிலதான் மாட்டுது தோழர்

    ReplyDelete