Saturday, January 18, 2025

தேர்தல் ஆணையம் வேஸ்டா ஆட்டுக்காரா?

 


ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவும் போட்டி போடவில்லை. விஜய் கட்சியும் போட்டி போடவில்லை. பாஜகவும் போட்டி போடவில்லையாம்.

 தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் போட்டியிடப் போவதில்லை என்பது ஆட்டுக்காரனின் வாதம்.

 திருமங்கலம் ஃபார்முலா படிதான் இடைத்தேர்தல் நடக்கும் என்பது ஊரறிந்த உண்மை. அப்படி முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது யார் பொறுப்பு?

 முழுக்க முழுக்க தேர்தல் ஆணாய்யத்தின் பொறுப்பு.

 தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? தேர்தல் பாதுகாப்புகளுக்காக அனுப்பப்படும் துணை ராணுவப் படைகள் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

 தேர்தல் ஆணையம் சுயேட்சையான அமைப்பு என்றால் அதை விட குரூரமான நகைச்சுவை எதுவுமில்லை. மோடி “பொறுக்கி” எடுத்த தேர்தல் ஆணையர்கள் அதனை மோடி ஆணையமாக எப்போதோ மாற்றி விட்டார்கள்.

 துணை ராணுவப்படைகள் மத்தியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 ஆளும்கட்சி முறைகேடுகள் செய்யுமாயின் அதனை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத அமைப்புதான் தேர்தல் ஆணையம் என்பது ஆட்டுக்காரன் அறிக்கையில் ஒளிந்திருக்கிற உண்மை.

 தமிழ்நாட்டு மக்களை அரசுக்கு எதிராக மாறி விட்டார்கள். 2026 ல் திமுக முற்றிலுமாக அழிக்கப்படும் என்றுதான் ஆட்டுக்காரனும் சங்கிகளும் அன்றாடம் பிதற்றி வருகிறார்கள்.

 அப்படி தமிழ்நாட்டு மக்கள் திமுக மீது வெறுப்பாக இருக்கிறார்கள் என்றால் அதை பயன்படுத்திக் கொள்வதுதானே ஒரு எதிர்க்கட்சி செய்ய வேண்டிய வேலை!

 பிறகு ஏன் பதுங்குகிறார்கள்?

 இடைத்தேர்தலில் கண்டிப்பாக தோற்று விடுவோம் என்பது ஆட்டுக்காரன், எடப்பாடி, விஜய் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். இடைத்தேர்தல் தோல்வி 2026 பொதுத்தேர்தலையும் பாதிக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

 அந்த பயத்தை காண்பித்துக் கொள்ளாமல் முறைகேடுகளின் மீது பழியைப் போட்டு தோல்வியிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.

 

 

No comments:

Post a Comment