மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்பினாலும் சில நேரங்களில் பொறுமையாக இருக்க முடிவதில்லை.
கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்து கொண்டிருந்த போது தோழர் சு.வெங்கடேசனுக்கு நெஞ்சு வலி வந்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதற்கு ஒரு அயோக்கிய சங்கி, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் “அவரு ஏன் அரசு மருத்துவமனைக்கு போகாமல் தனியார் மருத்துவமனைக்கு போனார். இதான் எளிமையான கட்சியா என்றெல்லாம் பதிவு போட்டிருந்தான். அவனது உள்நோக்கம் அவன் பதிவின் கடைசி வரியில் புரிந்தது.
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கோவிட் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது “விரைவில் மத்திய அமைச்சராகப் போகும் பொன்னாருக்கு வாழ்த்துக்கள்” என்று எழுதிய அயோக்கியக் கூட்டமல்லவா இது! வசந்தகுமார் இறந்த பின் நடந்த இடைத்தேர்தலிலும் பின்பு நடந்த 2024 பொதுத்தேர்தலிலும் வசந்தகுமாரின் மகனிடத்தில்தான் பொன்னார் தோற்றார் என்பது வரலாறு.
நெஞ்சு வலி என்று வந்தால் முதல் சில நிமிடங்களிலேயே சிகிச்சைக்கு போவது அவசியம், அப்போது அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதுதான் முக்கியமே தவிர, அரசு மருத்துவமனையா என்றெல்லாம் பார்க்க முடியாது என்று பின்னூட்டமிட்டேன்.
அயோக்கிய சங்கியல்லவா! மீண்டும் மீண்டும் முட்டாள்தனமாகவும் வக்கிரமாகவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். உன்னைப் போன்ற மூளையற்றவர்களிடம் இனி விவாதிக்கப்போவதில்லை என்று முடித்து விட்டேன்.
பின்பு
வந்த சில பின்னூட்டங்கள் அந்த அயோக்கிய சங்கியின் உள்நோக்கம் என்னவென்று சந்தேகித்தேனோ,
அதனை நிரூபித்து விட்டது. NO என்ற பின்னூட்டம் வருகையில் தோழர் சு.வெ நலமுடன் திரும்பிய
செய்தி வந்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
வைக்கம்
போராட்டத்தின் போது தந்தை பெரியார் சாக வேண்டும் என்று சத்ரு சம்ஹார யோகம் நடத்திய திருவிதாங்கூர் ராஜாதான் தந்தை பெரியார் கேரளா ஜெயில் இருந்த காலத்திலேயே செத்துப் போனான். பெரியார் அதன் பின்பு ஐம்பதாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்.
கலைஞருக்கு நாள் குறித்த ஜெ, அவருக்கு முன்பே காலமானார். இதெல்லாம் அந்த அயோக்கிய சங்கிகளுக்கு
தெரியாது போல . . .
No comments:
Post a Comment