முதலில்
இந்த காணொளியை பாருங்கள்.
நேற்று காலையில்
எழுதிய பதிவில்தான் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்தை “செத்ததுக்கு செல்லாமல் பத்துக்கு
போன” ஆட்டுக்காரனால்தான் நிறுத்தப்பட்டது என்று அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள் விதந்தோந்திக்
கொண்டிருப்பதாக எழுதினேன்.
இப்போது
இந்த காணொளி வெளி வருகிறது.
டங்க்ஸ்டன்
திட்டத்தை ஆதரித்து விட்டு, மக்களை வெளியேறச் சொல்லி விட்டு, வேண்டுமானால் சில எலும்புத்
துண்டுகளை பொறுக்கிக் கொள் என்பது தெனாவெட்டோடு பேசியவனா திட்டம் ரத்தை செய்ய வாயை திறந்திருக்கப் போகிறான்!
மார்க்சிஸ்ட்
கட்சி வழி நடத்திய மக்களின் போராட்டம், தமிழக சட்டசபைத் தீர்மானம் ஆகியவை உருவாக்கிய
அழுத்தம் காரணமாக திட்டத்தை திரும்பப் பெறுவது என்ற முடிவு எடுக்கப்பட்ட பின்பே ஆட்டுக்காரன்
டெல்லிக்கு அழைக்கப்பட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்கள்.
முதல்
காணொளி உண்மையா அல்லது திட்டத்திற்கு எதிரான ஆட்டுக்காரன் உண்மையா?
டங்க்ஸ்டன்
திட்டத்திற்கு ஆதரவாக முழங்கிய ஆட்டுக்காரந்தான் நிஜம். கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்துக்காக
என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவன் இறந்தாலும் கவலையில்லை, நாடு நாசமானாலும் கவலையில்லை
என்பதுதான் பாஜகவின் கொள்கை. இப்போது பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என்று குரல்
கொடுக்கும் ஆட்டுக்காரனா வேதாந்தா நிறுவனத்தின் லாபத்துக்கு எதிராக பேசுவான்?
வேறு
வழியில்லாமல் திட்டத்தை ரத்து செய்வது என்ற சூழ்நிலை வந்த பின்பு அரசியலுக்காக போட்டோஷூட் நாடகம் நடத்தினார்கள். அவ்வளவுதான்.
ஆட்டோ
ஓட்டுனர் வடிவேலுவுக்கு வேண்டுமானால் “வேற வாய், நாற வாய்” என்று இரண்டு வாய்கள் இருக்கலாம்.
லாப வெறி பிடித்த முதலாளிகளுக்கு ஆதரவான ஆட்டுக்காரன் போன்ற சங்கிகளுக்கு இருப்பது
ஒரு வாய்தான். அது எப்போதுமே “நாற வாய்”
No comments:
Post a Comment