நேற்று சென்னையில் மூன்று வேலைகள் இருந்தது. முதல் வேலையை முடித்து விட்டு இரண்டரை மணிக்கு சென்னை புத்த்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தேன். முதற்கடமையாக நுழைவாயிலில் இருந்த வள்ளுவர்-காந்தி-வ.உ.சி சிலைகள் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டு பின்பு அரங்கங்களை பார்வையிடத் தொடங்கினேன்.
வாங்க வேண்டிய நூல்கள் பற்றி ஏற்கனவே ஒரு எக்ஸெல் போட்டு எடுத்துச் சென்றதால் வேகமாகவே அவற்றை வாங்கியதோடு வேறு சில நூல்களையும் வாங்க முடிந்தது. இந்த வருடம் வாங்கியவற்றில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய நூல்கள் இரண்டு. இறுதிச்சுற்ற்றில் பல வருடங்களாக இடம் பெறும் நூல் ஒன்று.
கைகளில்
சுமக்க தெம்பு இருந்த வரை, அரங்குகளை பார்வையிட முடிந்தது. ஒரு பாட்டி, சக்கரங்கள்
வைத்த ஒரு பெட்டியை எடுத்து வந்திருந்தார்கள். அடுத்த வருடம் அதனை முயற்சிக்க வேண்டும்.
பட்டியல் கீழே இணைத்துள்ளேன். இவற்றில் யாராவது வாங்க வேண்டுமென்றால் வசதியாக அரங்கு எண்ணும் கொடுத்துள்ளேன்.
நாளை சென்னை புத்தகவிழாவின் இறுதி நாள்
No comments:
Post a Comment