Tuesday, October 10, 2023

கலை இரவுகளின் தோற்றம் - வரலாற்றுத் தகவல்

 


காலை எழுதியிருந்த பதிவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் தோழர் மு.பாலாஜி ஒரு விரிவான பின்னூட்டத்தை எழுதியிருந்தார். கலை இரவுகளின் தோற்றம் குறித்த முக்கியமான தகவல் அது. வரலாற்றுத் தகவல் என்று சொன்னால் கூட மிகையில்லை.

இதோ அவரது பின்னூட்டம்


கவிஞர் வெண்மணி திருவண்ணாமலையில் பணியாற்றிய காலத்தில் 'கவிதா இரவு' எனும் இரவு முழுக்க கவிதை கவிதை வாசிக்கும் நிகழ்வை நடத்தினார்கள். இந்த நிகழ்வில் தோழர் பிரளயன் கூட கவிதை வாசித்தார் என்பது மட்டுமின்றி அண்ணாமலை புராணம் என்னும் 35 பக்க சிறு நூலில் இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுள்ளார். திருவண்ணாமலையின் கலை இலக்கிய பயணம் குறித்தும் எழுதி உள்ளார்.

 ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்ட மாநாடு 1983இல் திருவண்ணாமலையில் நடந்த போது மாட வீதியில் உள்ள வன்னியர் மடத்தில் கலை இரவு எனும் நிகழ்வு நடந்துள்ளது கே.ஏ. குணசேகரன் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது அப்போது திருவண்ணாமலை கிளையின் செயலாளராக இருந்தவர் அரசம்பட்டு அழகேசன் என்பதும் குறிப்பிட தகுந்தது. 

பவா, கருணா இருவரின் வருகைக்கு பிறகும் கலை இரவு நிகழ்வு அரங்க கூட்டமாகவே நடந்து வந்தது. 1989 ல் தான் கலை இரவை, கலை இலக்கிய இரவு என்று மாற்றி பொது வெளியில் நடத்துவது என்று தமுஎகச கிளை கூட்டத்தில் திட்டமிடப்பட்டது அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். 

இந்த நிகழ்வின் வெற்றியில் பவா, கருணா பங்களிப்பு கூடுதலாக இருக்கும் அவ்வளவு தான். இந்த நிகழ்வு ஒரு அமைப்பின் சார்பில் நடைபெற்றது என்பது மட்டுமின்றி இதற்காக உழைத்த நூறு தோழர்களை என்னால் அடையாளப் படுத்த முடியும்.

மு.பாலாஜி
மாவட்ட செயலாளர்
தமுஎகச திருவண்ணாமலை.

மேலே முகப்பிலும் கீழேயுமுள்ள புகைப்படங்கள், எங்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமை கலை விழாக்களின் போது எடுக்கப்பட்டவை. சட்டென்று கிடைத்தவை இவைதான்.

மேலே முகப்பில் உள்ள படத்தில் தப்பாட்டம் இசைப்பவர்கள் எங்கள் மதுரைக் கோட்டத்தின் சுடர் கலைக்குழு தோழர்கள். சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு அது.






No comments:

Post a Comment